13 வயது சிறுமி துஷ்பிரயோகம்: திருமணமான இளைஞன் கைது!

#SriLanka #Arrest #Abuse #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
13 வயது சிறுமி துஷ்பிரயோகம்: திருமணமான இளைஞன் கைது!

மொனராகல, புத்தல பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் சீண்டல் செய்த குற்றச்சாட்டில் திருமணமான நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

புத்தல, ரஜ மாவத்தையைச் சேர்ந்த 37 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். பொலிஸ் அவசர அழைப்பு இலக்கத்திற்கு கிடைத்த தகவலின் அடிப்படையில் சந்தேகநபர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

பாதிக்கப்பட்ட சிறுமி மருத்துவ பரிசோதனைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி வசந்த பண்டாரவின் வழிகாட்டலில் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4