அறகலய போராட்டம் தொடர்பில் விசாரணை தேவை - நாமல்!!
#SriLanka
#Namal Rajapaksha
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
5 hours ago
அறகலய போராட்டம் மற்றும் வெளிநாடுகளில் இருந்து பெறப்பட்ட நிதி குறித்து விசாரிக்க ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட வேண்டும் என்று நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ வலியுறுத்தியுள்ளார்.
இலங்கை பொதுஜன பெரமுன கட்சி தலைமையகத்தில் ஊடகங்களுக்கு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் கருத்து வெளியிட்ட அவர், "போராட்டம் என்ற போர்வையில் தங்கள் அரசியல் இலக்குகளை அடைய ஒரு உயிர் இழக்கப்பட்டது.
ஒரு இளைஞர்கள் குழு தூக்கு மேடைக்கு அனுப்பப்பட்டது. ஆலோசனை வழங்கி, பொது ஊடகங்களுக்கு வந்து, நாங்கள் அவர்களைப் பார்த்துக்கொள்வோம், வெளியே வந்து அவர்களை அடிப்போம் என்று சொன்னவர்கள் இப்போது ராஜாக்கள். அந்த இளைஞர்கள் தூக்கு மேடைக்கு சென்றுவிட்டனர்." எனத் தெரிவித்துள்ளார்.