நியாயம் கேட்டு மூடப்பட்ட அப்பிள் கடைகள் அநீதி எற்பட இடமளியோம் (வீடியோ இணைப்பு)

#SriLanka #Jaffna #Fruits #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 months ago
நியாயம் கேட்டு மூடப்பட்ட அப்பிள் கடைகள் அநீதி எற்பட இடமளியோம் (வீடியோ இணைப்பு)

ஒவ்வொரு மாதமும் குறளிவித்தை காட்டி தன்னை பிரபல்யப்படுத்த முயற்சிக்கும் சுயனினைவற்றவர் தர்சானந்த் என குற்றம் சாட்டியுள்ள யாழ். மாநகர பழக்கடை உரிமையாளர்கள், நீதிமன்றின் உத்தரவில் தமக்கு அன்றைய ஈ.பி.டி.யின் முதல்வர் யோகேஸ்வரி பற்குணராஜாவின் ஆட்சியில் வழங்கப்பட்ட கடைகளை காழ்புணர்ச்சியின் காரணமாகவே அகற்ற முயற்சிக்கின்றார் என்றும் தெரிவித்துள்னர்.

யாழ். மாநகரின் உறுப்பினர் தர்சானந்தின் பழக்கடைகளை அகற்றுவது தொடர்பில் கொண்டுவரப்படும் பிராரணையை எதிர்த்து யாழ்.மத்திய பேருந்து நிலைய சூழலில் அமைந்துள்ள பழக்கடை வியாபாரிகள் மாநகரை முற்றுகையிட்டு போராட்டம் ஒன்றை இன்றையதினம் முன்னெடுத்திருந்தனர்.

இதன்போது இவ்வாறு கருத்து தெரிவித்த அவர் மேலும் கூறுகையில் - நாம் வாழ்வாதாரதை பாதுகாக்கவே போராடுகின்றோம். ஆனால் எமது நிலையை மானகரின் உறுப்பினர் தர்சானந்த் உணரவில்லை. 

அவர் சுயநினைவின்றியே இருப்பதாக தோன்றுகின்றது. அவரது இந்த பிரேரணையால் அவர் தனக்கு ஊடக விளம்பரத்தை தேடலாம். ஆனால் எமது வாழ்வியலை இழக்கச் செய்துதான் தனது விளம்பரத்தை தேடக்கூடாது. இவ்வாறான உறுப்பினரை தேர்ந்தெடுத்தது அப்பகுதி மக்களின் தவறாகவே நினைக்கின்றோம்.

எனவே எமக்கு உரிய தீர்வு தராது எமது கடைகளை அகற்றினால் நாம் குடும்பங்களுடன் மாநகரை முற்றுகையிட்டு போராடுவோம் என்றும் தெரிவித்தனர் இதேநேரம் பழக்கடை உரிமையாளர்களின் போராட்டத்துக்கு அஞ்சி இன்றைய மாநகரின் அமர்வுக்கு பின்கதவால் தர்சாந்த் வருகை தந்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4