பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு மஞ்சள் எச்சரிக்கை விடுப்பு
#Cold
#Warning
#Climate
#England
#Snow
Prasu
5 hours ago
பிரித்தானியாவின் பெரும்பாலான பகுதிகளுக்கு குளிர் காலநிலைக்கான மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குறித்த எச்சரிக்கையானது திங்கட்கிழமை வரை நடைமுறையில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
சில பகுதிகளில் வெப்பநிலை பூஜ்ஜியத்திற்கு கீழே குறையும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக கிழக்கு அயர்ஷையரின் கம்னாக்கில் வெப்பநிலையானது -4 பாகை செல்சியஸை எட்டக்கூடும் என முன்னறிவிக்கப்பட்டுள்ளது.
குறிப்பாக மலைப்பாங்கான இடங்களில் 10cm வரை பனி பெய்யும்.
இதற்கிடையே மேற்கு மற்றும் கிழக்கு ஸ்காட்லாந்திற்கான தற்போதைய மழை எச்சரிக்கைகள் புதன்கிழமை நள்ளிரவு வரை அமலில் உள்ளன, கனமழை பயண இடையூறுகள் மற்றும் வெள்ளத்தை ஏற்படுத்தும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
(வீடியோ இங்கே )