கனடாவில் கூடாரம் ஒன்று தீ பற்றி எரிந்ததில் ஒருவர் மரணம்
#Death
#Canada
#Accident
#fire
Prasu
5 hours ago
ஒன்டாரியோ மாகாணத்தின் நயாகரா பிராந்தியத்தில் உள்ள சென். கத்தரின்ஸ் பகுதியில் கூடாரத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் ஆண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
கூடாத்தில்ஆண் ஒருவர் உயிரிழந்த நிலையில் கண்டுபிடிக்கப்பட்டதைத் தொடர்ந்து பொலிஸார் விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.
கிளெண்டேல் அவென்யூ அருகே மவுண்டன் லாக்ஸ் பூங்கா காட்டுப்பகுதியில் இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
மரங்கள் சூழ்ந்த பகுதியில் அமைந்திருந்த ஒரு கூடாரம் முழுமையாக தீப்பற்றி எரிந்து கொண்டிருந்ததாக விசாரணை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்த நபரின் அடையாளம் இதுவரை வெளியிடப்படவில்லை.
(வீடியோ இங்கே )