கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவிற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

#SriLanka #Festival #Church #Pilgrims
Prasu
3 hours ago
கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழாவிற்கான நடவடிக்கைகள் ஆரம்பம்

வரலாற்றுச் சிறப்பு மிக்க கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் வருடாந்த திருவிழா எதிர்வரும் 27 மற்றும் 28ம் திகதிகளில் நடைபெறவுள்ள நிலையில் கடற்படையினர் முன்னாயத்த நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

இம்முறை இலங்கையைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களும் இந்தியாவைச் சேர்ந்த 4000 யாத்திரிகர்களும் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

images/content-image/1770880276.jpg

அதேவேளை இம்முறை குறிகட்டுவானிலிருந்து கச்சதீவிற்கு படகுச் சேவைக்கான ஒருவழிக்கட்டணமாக ரூ. 1200 அறவிடுவது எனவும், நெடுந்தீவிலிருந்து கச்சதீவிற்கான ஒரு வழிக்கட்டணமாக ரூ. 1000 அறவிடுவது எனவும் குறிகட்டுவானிலிருந்து 46 தனியார் படகுகள் சேவையில் ஈடுபடவுள்ளது.

அத்துடன் இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் தனியார் போக்குவரத்து துறையினரின் பஸ்கள் 27 ஆம் திகதி காலை 4.00 மணி முதல் பி. ப 01.00 மணி வரை யாழ்ப்பாணம் பஸ் நிலையத்திலிருந்து சேவையில் ஈடுபடும்.

கடற்படையினரின் ஒழுங்கமைப்பில் கச்சதீவில் ஒரு அம்பியூலன்ஸ் படகும், பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரின் ஒழுங்கமைப்பில் 02 அம்பியூலன்ஸ் வண்டிகள் குறிகட்டுவானிலும் தயார் நிலையில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!