மலையக மக்கள் துயர் துடைக்க படுகிறதா? மக்களின் வேண்டுகோள் நிறைவேறுகிறதா?

#SriLanka #Tamil People #NuwaraEliya #President #Malayagam
Prasu
4 months ago
மலையக மக்கள் துயர் துடைக்க படுகிறதா? மக்களின் வேண்டுகோள் நிறைவேறுகிறதா?

இருநூறு வருடங்களைக் கடந்தும் வஞ்சிக்கப்படும் சமூகமாக மலையக மக்கள் வாழ்ந்து வருகிறார்கள். 

ஒவ்வொரு அரசாங்கமும் ஆட்சிக்கு வரும்போதெல்லாம் மக்களுக்கு பூச்சாண்டி காட்டி, மலையக மக்களுக்கு ஏதோ ஒன்றை செய்துவிடுவோமென ஆசையை வளர்த்து அவர்களின் வாக்குகளை அள்ளி ஆட்சியில் அமருவார்கள். ஆட்சியில் அமர்ந்த பின்னர் அம் மக்களை ஏறெடுத்துக்கூடப் பார்ப்பதில்லை.

ஊடகங்களை திருப்திப்படுத்துவதற்காக குறிப்பிட்ட சிலருக்கு மாத்திரம் உதவிகளை வழங்கியதும் அத் திட்டம் நிறைவடைந்துவிடும்.

அவையே தேர்தல் பிரசாரங்களில் தலைப்புகளாக மாறி பாதாதைகளாக தொங்கும். இவ்வாறு காலாதி காலமாக வஞ்சிக்கப்பட்டுவரும் மலையக மக்கள், நாட்டின் பொருளாதாரத்தில் மிகப்பெரும் பலமாகவே உள்ளார்கள்.

images/content-image/1770840749.jpg

அன்றாடம் தங்கள் உடலை வருத்தி நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு பெரும் பங்காளிகளாக மாறி உழைத்து வருகிறார்கள். 

அதே போலதான் அரசியல்வாதிகளும் தமது வாக்கு வங்கியாக இவர்களை பயன்படுத்தத் தவறுவதில்லை.

எது எப்படியோ தற்போது நாட்டில் மாற்றத்தை எதிர்பார்த்த பெரும்பாலானவர்களால் ஆட்சியில் அமர்த்தப்பட்டவரே, தற்போது ஆட்சியில் இருக்கும் ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க.

இன்றைய தினம், நேரடியாக மலையக மக்களின் இருப்பிடத்திற்கே சென்று மிக அன்னியோன்னியமாக மக்களோடு மக்களாக நெருங்கி உறவாடியமை, அனைவர் மத்தியிலும் பெரும் நெகிழ்வுத் தன்மையை ஏற்படுத்தியுள்ளது.

வெறுமனே இதுவொரு சந்திப்பாக இல்லாது அம் மக்களின் அடிப்படை எதிர்பார்ப்புகளையேனும் நிறைவு செய்வதாக அமைந்தால், எப்போதும் மறக்கப்படாத ஜனாதிபதியாக, ஜனாதிபதியின் இருப்பு நிலைகொள்ளும்.

images/content-image/1770840767.jpg

இருநூறு ஆண்டுகளைக் கடந்த மலையக மக்களின் துயர், ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்கவின் ஆட்சியிலேனும் மாற்றமடைந்தால், மலையக மக்களின் வாழ்வியலில் பொன்னெழுத்துகளால் ஜனாதிபதியின் பெயர் பொறிக்கப்படும் என்பதில் எவ்வித ஐயமுமில்லை.

நேரடியாக பார்வையிட்டு மலையக மக்களின் துயரை அறிந்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, தனது சிந்தனையில் மாற்றத்தை ஏற்படுத்தி மலையக மக்களின் வாழ்வியல் ஒளி ஏற்றி வைப்பாரா என்பதே இப்போதுள்ளவர்களின் பெரும் எதிர்பார்ப்பாக உள்ளது.

நன்றி

ஈழத்து எழுத்தாளர் தன.ரஜீவன்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4