தமிழ் மக்கள் மீது அனுரவுக்கு அக்கறை இல்லையா? உண்மை என்ன?

#SriLanka #TamilCinema #people #President #AnuraKumaraDissanayake
Prasu
6 months ago
தமிழ் மக்கள் மீது அனுரவுக்கு அக்கறை இல்லையா? உண்மை என்ன?

இலங்கை அரசியலில் ‘சிஸ்டம் சேஞ்ச்’ என்று முழங்கியபடி அரியணை ஏறியிருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கு, கம்பவாரிதி ஜெயராஜ் போன்றவர்கள் வழங்கும் ‘நற்சான்றிதழ்’ என்பது வெறும் புகழ்ச்சியல்ல; அது தமிழினத்தின் நீதிக்கான போராட்டத்தைக் குழிதோண்டிப் புதைக்கும் ஒரு நயவஞ்சகச் செயல்.

யார் இந்த நற்சான்றிதழ் வழங்குபவர்கள்? கடந்த காலத்தில் தமிழினப் படுகொலைகளோடு தொடர்புடைய, சிங்கள மற்றும் முஸ்லீம் இனவாத அதிகார வர்க்கத்திற்கு பொன்னாடை போர்த்தி, பட்டங்கள் வழங்கி கௌரவிப்பதையே தொழிலாகக் கொண்டவர் கம்பவாரிதி. தமிழர்களின் உரிமைகளை அடகு வைத்து தனிநபர் அனுகூலம் பெறுவதில் இவர் கைதேர்ந்தவர். 

இவரிடமிருந்து அனுரவிற்கு நற்சான்றிதழ் கிடைக்கிறது என்றால், அனுரவின் பயணம் எத்தகையது என்பதை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும். வாக்களித்தோம். ஆனால் வஞ்சிக்கப்பட்டோம்.

images/content-image/1770832864.jpg

மாற்றத்தை விரும்பி நானும் ஒருவனாகத் தேசிய மக்கள் சக்திக்கு (NPP) வாக்களித்தேன். ஆனால், இன்றுவரை நடப்பது என்ன? பயங்கரவாதத் தடைச் சட்டம் (PTA) எனும் தூக்குக்கயிறு: தேர்தல் மேடைகளில் PTA சட்டத்தை முற்றாக நீக்குவோம் என்று வீரவசனம் பேசினார்கள். 

ஆனால் இன்று? அதே அடக்குமுறைச் சட்டத்தை இன்னும் வீரியமாக (PSTA) நடைமுறைப்படுத்தத் துடிக்கிறார்கள். தமிழர்களைச் சிறையில் அடைக்க வைத்திருக்கும் அதே தூக்குக்கயிறு இன்னும் அறுக்கப்படவில்லை.

விடுதலை செய்யப்படாத அரசியல் கைதிகள்: தசாப்தங்களாகச் சிறையில் வாடும் எம் உறவுகளை விடுதலை செய்வோம் என்று வவுனியாவில் கொடுத்த வாக்குறுதி என்னவானது? சட்ட நடைமுறைகளைக் காரணம் காட்டி, எமது இளைஞர்களின் வாழ்க்கையைச் சிறைக்குள்ளேயே சிதைத்துக் கொண்டிருக்கிறது இந்த அரசு. 

அதிகாரப் பகிர்வு - ஒரு பகற்கனவு: 13-வது திருத்தத்தை அமல்படுத்துவதிலோ அல்லது தமிழ் மக்களுக்கு முறையான அதிகாரப் பகிர்வை வழங்குவதிலோ NPP அரசுக்கு எவ்வித விருப்பமும் இல்லை. மாகாண சபை தேர்தல்களைத் தட்டிக்கழிப்பதன் மூலம் எமது அரசியல் உரிமைகள் திட்டமிட்டுப் பறிக்கப்படுகின்றன.

images/content-image/1770832875.jpg

காணி ஆக்கிரமிப்பும் சர்வதேசப் புறக்கணிப்பும்: தையிட்டி போன்ற இடங்களில் பௌத்த மயமாக்கல் மற்றும் இராணுவத்தின் நில ஆக்கிரமிப்பு இன்றும் தடையின்றித் தொடர்கிறது. சர்வதேச விசாரணைகளை ராஜபக்சக்களைப் போலவே இவர்களும் இரும்புக்கரம் கொண்டு எதிர்க்கிறார்கள். 

அனுரவின் 'மென்மையான' மேலாதிக்கம் ராஜபக்சக்கள் தமிழர்களைத் தள்ளி வைத்து ஒடுக்கினார்கள். ஆனால் அனுர, தமிழர்களை அணைத்துக்கொண்டே அவர்களின் அடையாளத்தை அழிக்க முனைகிறார். 

இது "சமத்துவமான" ஆட்சி அல்ல; மாறாக தமிழர்களின் எதிர்ப்பே இல்லாத ஒரு 'சிங்கள பௌத்த மேலாதிக்கத்தை' நிலைநாட்டும் ஒரு நுணுக்கமான சதித் திட்டம். 

மெய்ப்பொருள் காண்பதே அறிவு! கம்பவாரிதி போன்றவர்களின் பந்தம் பிடிக்கும் கருத்துக்களை அறிவின்றிப் பகிர்வது தமிழினத்திற்குச் செய்யும் பச்சைத் துரோகமாகும். 

மாற்றம் என்பது முகங்களில் அல்ல, கொள்கைகளில் இருக்க வேண்டும். எம் உரிமைகள் கிடைக்கும் வரை எந்த முகமும் எமக்கு மீட்பர் அல்ல! 

நன்றி

முகநூல் பதிவு

Dr முரளி வல்லிபுரநாதன்

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4