தேரர் உள்ளிட்ட பத்து பேர் பிணையில் விடுதலை!

#SriLanka #Trincomalee #Court Order #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
தேரர் உள்ளிட்ட பத்து பேர் பிணையில் விடுதலை!

திருகோணமலையில் சட்டவிரோதமாக பௌத்த சிலையை நிறுவ முற்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்டிருந்த நான்கு பௌத்த பிக்குகள் மற்றும் ஆறு பேரை பிணையில் விடுதலை செய்ய நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. 

இதற்கமைய குறித்த 10 பேருக்கும் 10 இலட்சம் ரூபாய் பெறுமதியான இரண்டு சரீரப் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர். 

அத்துடன் அவர்கள் அனைவரும் வழக்குகளில் தவறாமல் கலந்துகொள்ள வேண்டும் என்றும், சாட்சிகளை பயமுறுத்தக் கூடாது என்றும், பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கக் கூடாது என்றும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. 

இந்த நிபந்தனைகள் மீறப்பட்டால், பிணை நீக்கப்பட்டு உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் விளக்கமறியலில் வைக்கப்படுவார்கள் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் தொடர்புடைய வழக்கு வரும் ஜுன் மாதம் 17 ஆம் திகதி விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது. 


இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4