சுவிற்சர்லாந்தில் தட்டம்மை நோய் பரவும் அபாயம் - நிபுணர்கள் எச்சரிக்கை

#Switzerland #Disease #Warning #Measles
Prasu
1 hour ago
சுவிற்சர்லாந்தில் தட்டம்மை நோய் பரவும் அபாயம் - நிபுணர்கள் எச்சரிக்கை

ஐரோப்பிய நாடுகள் பலவற்றில் தட்டம்மைத் தொற்று தற்போது வேகமாக பரவிவருகிறது.

சுவிட்சர்லாந்தைப் பொருத்தவரை, இப்போதைக்கு அங்கு தட்டம்மை பரவல் இல்லை என்றாலும், வெளிநாட்டிலிருந்து வருபவர்களால் தட்டம்மை பரவும் அபாயம் உள்ளதால், நிலைமை மாறலாம் என்று துறைசார் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

ஐரோப்பாவில், குறிப்பாக, பிரான்ஸ், பிரித்தானியா மற்றும் போலந்து ஆகிய நாடுகளில் தட்டம்மை தொற்று வேகமாக பரவிவருகிறது.

ஆஸ்திரியா நாடு தட்டம்மை இல்லாத நாடு என பெயர் பெற்றிருந்த நிலையில் தற்போது அந்த நிலை மாறியுள்ளது.

அந்தவகையில் சுவிட்சர்லாந்துக்கு வெளிநாட்டிலிருந்து வருபவர்களால் தட்டம்மை பரவும் அபாயம் உள்ளதால், சுவிட்சர்லாந்தும் தட்டம்மை இல்லாத நாடு என்னும் பெயரை இழக்க நேரிடலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தட்டம்மை பயங்கரமாகப் பரவும் தொற்று எனக் கூறும் மருத்துவத்துறையினர், அது மரணம் வரையிலான மோசமான விளைவுகளை ஏற்படுத்தலாம்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!