லாஃப் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு; பெரும் சிரமத்தில் நுகர்வோர்!

#SriLanka #Laugfs gas #Gas #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 months ago
லாஃப் எரிவாயுவுக்கு தட்டுப்பாடு; பெரும் சிரமத்தில் நுகர்வோர்!

மஸ்கெலியா, சாமிமலை மற்றும் நல்லதன்னி பகுதிகளில் உள்ள நுகர்வோர் மற்றும் உணவக உரிமையாளர்கள் லாஃப் எரிவாயு கிடைக்காததால் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக தெரிவித்துள்ளனர். 

எரிவாயு நிறுவனத்திடம் ஆர்டர் செய்திருந்தாலும், புதிய விலை திருத்தத்திற்கு பிறகு கிட்டத்தட்ட 02 வாரங்களாக இருப்பு கிடைக்கவில்லை என்று இந்தப் பகுதிகளில் உள்ள எரிவாயு மொத்த விற்பனையாளர் கடை உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.

லாஃப் எரிவாயு கிடைக்காததால், சிலிண்டருக்கு வேறு வகை எரிவாயுவை வாங்க முடியாமல் அன்றாட நடவடிக்கைகளில் பெரும் சிரமத்தை எதிர்கொள்வதாக நுகர்வோர் மேலும் தெரிவித்தனர்.

லாஃப் எரிவாயு நிறுவனம் காலத்திற்கு காலம் தன்னிச்சையாக விலை உயர்வு செய்த போதிலும் நுவரெலியா மாவட்டத்தில் பல இடங்களில் இந்த நிறுவனத்தின் எரிவாயு தட்டுப்பாடு நிலவுகிறது.

இது குறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர் பாதிக்கப்பட்ட பாவனையாளர்கள்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4