ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரை கொலை செய்ய முயன்ற பிரதான சந்தேகநபர் கைது!

#SriLanka #Arrest #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
ஐக்கிய மக்கள் சக்தியின் உறுப்பினரை கொலை செய்ய முயன்ற பிரதான சந்தேகநபர் கைது!

கடந்த உள்ளூராட்சித் தேர்தலின் போது களுத்துறை மாநகர சபைக்குப் போட்டியிட்ட ஐக்கிய மக்கள் சக்தி  (SJB) உறுப்பினர் பந்துல பிரசன்னவை கொலை செய்ய முயன்ற வழக்கில்  பெண் ஒருவர் உட்பட நான்கு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

 பொலிஸ் சிறப்புப் படை (STF) மற்றும்  களுத்துறை மாவட்ட குற்றப் பிரிவினரின் கூட்டு நடவடிக்கையில் இந்த கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

இதன்போது  முக்கிய சந்தேக நபரான நாகொடவைச் சேர்ந்த 24 வயதுடைய நபர் நேற்று (10) பலாங்கொடையில் வைத்து கைது செய்யப்பட்டார். 

 2025 டிசம்பரில் நாகொட மருத்துவமனையில் சிறைக் கைதி ஒருவரை சுட்டுக் கொல்ல முயன்றது மற்றும் தெஹிவளையில் உள்ள ஹோட்டல் உரிமையாளரைக் கொன்றது உள்ளிட்ட பல கடுமையான குற்றங்களில் அவர் ஈடுபட்டதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. 

மேலும் சந்தேகநபருக்கு உதவிய குற்றச்சாட்டில்  களுத்துறையைச் சேர்ந்த 23 மற்றும் 24 வயதுடைய இரண்டு ஆண்கள் மற்றும் போலோசகமவைச் சேர்ந்த 23 வயதுடைய பெண் ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர். 

அவர்களிடம் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4