காதலர் தினத்தில் வெளியாகும் பிரபல காதல் திரைப்படம்
#TamilCinema
#release
#valentine
#Movie
Prasu
2 hours ago
காதலர் தினத்தை முன்னிட்டு, சூர்யாவின் 'மௌனம் பேசியதே', மாதவனின் 'மின்னலே' ஆகிய திரைப்படங்கள் வெளியாக உள்ள நிலையில் இந்த வரிசையில் தற்போது 'காதலர் தினம்' படம் வெளியாக உள்ளது.
1999ம் ஆண்டு இயக்குநர் கதிர் இயக்கத்தில் நடிகர் குணால், நடிகை சோனாலி, நடிப்பில் வெளியான படம் 'காதலர் தினம்'.
தமிழ் சினிமாவில் எத்தனை படங்களை காதலை மையமாக்கொண்டு வெளியானாலும் 'காதலர் தினம்' படத்திற்கான ரசிகர்கள் பட்டாளம் எராளம்.
இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் வெளியான ஒவ்வொரு பாடல்களும் இன்றும் ரசிகர்களால் ரசிக்கப்படுகிறது.
இப்படம் வெளியான நேரத்தில் வசூலிலும், விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றிப்படமாக அமைந்தது குறிப்பிடத்தக்கது.
(வீடியோ இங்கே )