அமெரிக்கா மற்றும் ஆர்மீனியா இடையே கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தம்

#America #Nuclear #Agreement #Armenia
Prasu
4 months ago
அமெரிக்கா மற்றும் ஆர்மீனியா இடையே கையெழுத்தான அணுசக்தி ஒப்பந்தம்

ஆர்மீனியாவும், அமெரிக்காவும் அணுசக்தி ஒத்துழைப்புக்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளன.

பிரதமர் நிகோல் பாஷினியன் மற்றும் ஆர்மினியா சென்றுள்ள அமெரிக்க துணை அதிபர் ஜே.டி.வான்ஸ் இந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.

"123 ஒப்பந்தம்" என்று அழைக்கப்படும் இந்த ஒப்பந்தம் அமெரிக்க அணுசக்தி தொழில்நுட்பம், எரிபொருள் மற்றும் உபகரணங்களை அர்மீனியாவிற்கு சட்டப்பூர்வமாக ஏற்றுமதி செய்ய வழிவகை செய்கிறது. 

இந்த ஒப்பந்தத்தின் மூலம் அர்மீனியாவிற்கு சுமார் $5 பில்லியன் மதிப்பிலான ஆரம்ப ஏற்றுமதிகளும், கூடுதலாக $4 பில்லியன் மதிப்பிலான நீண்டகால பராமரிப்பு மற்றும் எரிபொருள் விநியோக ஒப்பந்தங்களும் கிடைக்கும்.

மேலும் "நாங்கள் ஆர்மீனியாவிற்கு அமைதியை மட்டும் ஏற்படுத்தவில்லை; ஆர்மீனியாவும் அமெரிக்காவும் இணைந்து உண்மையான செழிப்பை அடைவதற்கான சூழலையும் உருவாக்குகிறோம்" என்று ஜே.டி.வான்ஸ் தெரிவித்துள்ளார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4