இலங்கையில் இருந்து பெண்களை இறக்குமதி செய்யவேண்டும் - தென்கொரிய அதிகாரியின் கருத்து!! வேடிக்கை பார்க்கும் அரசு!!

#SriLanka #SouthKorea #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
இலங்கையில் இருந்து பெண்களை இறக்குமதி செய்யவேண்டும் - தென்கொரிய அதிகாரியின் கருத்து!! வேடிக்கை பார்க்கும் அரசு!!

பிறப்பு விகிதத்தை அதிகரிக்க "வியட்நாம் அல்லது இலங்கையிலிருந்து" இளம் பெண்களை இறக்குமதி செய்யுமாறு தென் கொரிய அதிகாரி ஒருவர் கூறிய விடயம் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

தெற்கு ஜிண்டோ கவுண்டியின் தலைவரான கிம் ஹீ-சூ, என்ற அதிகாரி பிறப்பு விகிதத்தை அதிகரிக்க வியட்நாம் மற்றும் இலங்கையில் இருந்து பெண்களை இறக்குமதி செய்து அவர்களை கிராமப்புற இளைஞர்களுக்கு திருமணம் செய்து வைக்க வேண்டும் எனக் கூறியிருந்தார். 

இந்த விவகாரம் சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், இதற்கு வியட்நாம் அரசாங்கம் கடுமையான எதிர்ப்பை வெளியிட்டிருந்தது. 

இருப்பினும் குறித்த அதிகாரி இலங்கையில் இருந்தும் பெண்களை இறக்குமதி செய்ய வேண்டும் என குறிப்பிட்டிருந்த நிலையில், இலங்கை அரசாங்கம் இதற்கு எவ்வித கருத்தும் தெரிவிக்காமல் மௌனம் காத்து வருகிறது. 

இந்த விடயத்தை இலங்கை அரசாங்கம் தவிர்த்து வருவது அரசியல் களத்தில் பேசுப்பொருளாக மாறியுள்ளது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4