கனடாவில் இலங்கையரின் தவறான நடத்தை; அதிரடியாக கைது செய்த பொலிஸார்..
கனடா - டொராண்டோ நகரில் பெண்களை ரகசியமாகப் படம்பிடித்த இலங்கையரான யூடியூபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். இலங்கையைச் சேர்ந்த 45 வயதுடைய நபர் ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில், டொராண்டோவின் யூனியன் ஸ்டேஷன் உள்ளிட்ட பொது இடங்களில் பெண்களின் அனுமதியின்றி அவர்களைப் படம்பிடித்து, சமூக வலைதளங்களில் பதிவேற்றியதாகக் குறித்த நபர் மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
பாதிக்கப்பட்ட பெண்கள் இதனைத் தட்டிக்கேட்டபோது அவர்களிடம் குறித்த நபர் அநாகரிகமாக நடந்துகொண்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கடந்த டிசம்பர் மாதம் கைது செய்யப்பட்ட இவர், கடந்த பெப்ரவரி 04ம் திகதி 2026 அன்று ஒன்டாரியோ நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளார்.
இதையடுத்து, இவர் மீது நான்கு விதமான குற்றவியல் அச்சுறுத்தல் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. மேலும், ஓகஸ்ட் 21, 2025 அன்று, அதே நபர், யூனியன் ஸ்டேஷனில் உள்ள ஒரு ஊழியரை அவர்களின் சம்மதமின்றி படம்பிடித்து, அவர்களின் இனம் குறித்து துன்புறுத்தும் கருத்துக்களைத் தெரிவித்ததாகக் கூறப்படுகிறது.
அடுத்ததாக செப்டம்பர் 27, 2025 அன்று, டேவிட் பெக்காட் சதுக்கத்தில், இதேபோன்ற சம்பவம் நடந்ததாகவும் அங்கு நின்ற ஒருவர் அணுகி, நிறுத்துமாறு கோரிக்கைகள் விடுத்த போதிலும் படப்பிடிப்பைத் தொடர்ந்துள்ளதுடன் மோதலில் ஈடுபட்டுள்ளார்.
டொராண்டோ பொலிஸார் அவரது படத்தை வெளியிட்டு, இவர் மூலம் பாதிக்கப்பட்டவர்கள் இருப்பின் டொராண்டோ பொலிஸ் சேவையைத் தொடர்பு கொள்ள முடியும் என வலியுறுத்தியுள்ளனர்.
கனடிய சட்டத்தின்படி இந்தக் குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டால், அவருக்கு அதிகபட்சமாகப் பத்து ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை விதிக்கப்பட வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்