ஹப்புத்தளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
2 hours ago
ஹப்புத்தளையில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை!

கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு பொரலந்த மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பில்   பொலிஸார் விசாரித்து வருகின்றனர். 

 இந்த சம்பவம் நேற்று மாலை (08) ஹப்புத்தளை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பிடபொல பகுதியில் இடம்பெற்றுள்ளது. 

 உயிரிழந்தவர் பிடபொல பகுதியைச் சேர்ந்த 65 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 கொலை செய்யப்பட்டவருக்குச் சொந்தமான விவசாய நிலத்தில் இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

 கொலைக்கான காரணம் மற்றும் சந்தேக நபர்களின் அடையாளம் இன்னும் கண்டறியப்படவில்லை என பொலிஸார் மேலும் தெரிவித்தனர். 

 சம்பவம் தொடர்பில் ஹப்புத்தளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!