பன்றி இறைச்சியை உட்கொண்ட யானை உயிரிழப்பு - திருகோணமலையில் சம்பவம்!

#SriLanka #Trincomalee #Elephant
Thamilini
4 hours ago
பன்றி இறைச்சியை உட்கொண்ட யானை உயிரிழப்பு - திருகோணமலையில் சம்பவம்!

திருகோணமலை மொரவெவ பகுதியில் பன்றி இறைச்சித் துண்டை சாப்பிட்ட காட்டு யானை ஒன்று உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

மொரவெவ டி-9 பகுதியில் யானை கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. 

சுமார் 8 வயது மதிக்கத்தக்க காட்டு யானை, சில நாட்களுக்கு முன்பு பன்றி இறைச்சித் துண்டை சாப்பிட்ட பிறகு நோய்வாய்ப்பட்டது.

இந்நிலையில் குறித்த யானை சாப்பிட முடியாமல் அவதிப்பட்ட நிலையில் உயிரிழந்ததாக கால்நடை மருத்துவர் அறிவித்துள்ளார். 

இப்பகுதியில் வேட்டையாடுபவர்கள் பன்றிகளைக் கொல்ல இந்த பன்றி இறைச்சித் துண்டுகளைப் பயன்படுத்துவதாகவும், யானை இவ்வாறு அமைக்கப்பட்ட வலையில் சிக்கியிருக்கலாம் என்று அவர்கள் சந்தேகிப்பதாகவும் வனவிலங்கு அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர். 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!