கூட்டுறவு விற்பனை நிலையங்களில் இலவச ஆயுள் காப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை!
கூட்டுறவு விற்பனை நிலையங்களில் ஒரு மாதத்திற்குள் 10,000 ரூபாய்க்கு மேல் செலவிடும் நுகர்வோருக்கு இலவச ஆயுள் காப்பீட்டுத் தொகையை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு மேம்பாட்டு அமைச்சர் வசந்த சமரசிங்க அறிவித்தார்.
அனுராதபுரத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியைத் தொடர்ந்து ஊடகங்களுக்குப் பேட்டியளித்த அமைச்சர் இவ்வாறு கூறியுள்ளார்.
இதன்போது மேலும் கருத்து வெளியிட்ட அவர், இந்தக் காப்பீட்டுத் தொகை 300,000 ரூபாய்க்கு மேல் மதிப்புடையதாக இருக்கும் என்று கூறினார்.
கூட்டுறவு சங்கங்களின் அனைத்து உறுப்பினர்களும் ஆயுள் காப்பீட்டுத் திட்டத்திற்குத் தகுதி பெறுவார்கள் என்று அவர் மேலும் கூறினார்.
தேசிய பொருளாதாரத்தின் ஒரு முக்கிய அங்கமாக கூட்டுறவு வணிகங்களை வலுப்படுத்தும் முயற்சிகளின் ஒரு பகுதியாக, கூட்டுறவு ஊழியர்கள் ஆயுள் காப்பீடு உட்பட திருப்திகரமான சம்பளம் மற்றும் சலுகைகளைப் பெறுவார்கள் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்