விடுதலை புலிகள் பயன்படுத்தியதாக நம்பப்படும் 03 ரொக்கெட் லாஞ்சர்கள் கண்டுப்பிடிப்பு!

#SriLanka #Batticaloa #Swedan
Thamilini
4 months ago
விடுதலை புலிகள் பயன்படுத்தியதாக நம்பப்படும் 03 ரொக்கெட் லாஞ்சர்கள் கண்டுப்பிடிப்பு!

போரின் போது விடுதலைப் புலிகளால் நிலத்தடியில் புதைக்கப்பட்டதாக நம்பப்படும் மூன்று ரொக்கெட் லாஞ்சர்கள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன. 

ஸ்வீடனில் தயாரிக்கப்பட்ட குறித்த ரொக்கெட் லாஞ்சர்கள் மட்டக்களப்பின் குடும்பிமலை பகுதியில் கண்டுப்பிடிக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. 

பாதுகாப்பு படையினருக்கு  கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையில், குடும்பிமலை பகுதியில் சிறப்புப் படை (STF) பணியாளர்கள் மற்றும் இராணுவப் புலனாய்வு அதிகாரிகள் நடத்திய சிறப்பு கூட்டுத் தேடுதல் நடவடிக்கையின் போது இந்த ஆயுதங்கள் மீட்கப்பட்டன. 

 இந்த மூன்று ராக்கெட் லாஞ்சர்கள் மேலதிக விசாரணைக்காக வாழைச்சேனை பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன.

அதே நேரத்தில் சம்பவம் குறித்து STF கூடுதல் விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4