கனடாவில் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்

#Arrest #Canada #Terrorism Act
Prasu
5 months ago
கனடாவில் பயங்கரவாத குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட இளைஞர்

கனடாவில் இளைஞர் ஓருவருக்கு எதிராக பயங்கரவாத குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது.

கனடாவின் கியூபெக் நகரப் பகுதியில் வசிக்கும் ஒரு இளைஞர், சமூக ஊடகங்களில் நாசி அமைப்புடன் தொடர்புடைய “வன்முறை சித்தாந்தத்தை” பிரசாரம் செய்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

குறித்த இளைஞர் ‘அடம் வாஃபென் டிவிஷன்’ எனப்படும் நியோ-நாசி அமைப்பால் இயங்கும் இணையதளத்தை பிரசாரம் செய்தது கண்டறியப்பட்டுள்ளது.

இந்த விசாரணை 2024ம் ஆண்டு தொடங்கப்பட்டது எனவும் தேவையான ஆதாரங்கள் கிடைத்ததையடுத்து, இந்த வாரம் குற்றச்சாட்டுகள் பதிவு செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கியூபெக் பிராந்தியத்தில் உள்ள இரண்டு வீடுகளில் சோதனை நடத்தி சில பொருட்களை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

அப்போது, பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்து அமைதியாக இருக்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவர் ‘பீஸ் பாண்ட்’ ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தார்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4