லிபியா முன்னாள் ஜனாதிபதி கடாபியின் மகன் சுட்டுக்கொலை

#Death #Murder #GunShoot #Libiya
Prasu
4 months ago
லிபியா முன்னாள் ஜனாதிபதி கடாபியின் மகன் சுட்டுக்கொலை

லிபியாவில் நீண்ட காலமாக ஜனாதிபதியாக ஆட்சி செய்த முயம்மர் கடாபியின் ஆட்சி 2011ம் ஆண்டு ஆகஸ்ட் கவிழ்க்கப்பட்டது. பின்னர், அக்டோபர் 20 அன்று முயம்மர் கடாபி கொல்லப்பட்டார்.

இந்த நிலையில், முயம்மர் கடாபியின் மகன் சைப் அல்-இஸ்லாம் கடாபி படுகொலை செய்யப்பட்டுள்ளார்.

ஷின்டான் நகரில் உள்ள வீட்டில் சைப் அல்-இஸ்லாம் கடாபி இருந்தபோது அங்கு துப்பாக்கி ஏந்திய 4 நபர்கள் உள்ளே புகுந்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.

அந்த மர்ம நபர்கள் சைப் அல்-இஸ்லாம் கடாபியை சுட்டுக்கொன்றுவிட்டு தப்பி சென்றனர். சைப் அல்-இஸ்லாம் கடாபி கொல்லப்பட்டதை அவரது வக்கீல் காலித் அல்-சைதி, அரசியல் ஆலோசகர் அப்துல்லா உஸ்மான் ஆகியோர் உறுதிப்படுத்தினர்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4