ரீ-ரிலீஸ் ஆகும் 1994ம் ஆண்டு வெளியான 'அமைதிப்படை' திரைப்படம்
#TamilCinema
#release
#Movie
Prasu
1 hour ago
நடிகர் மணிவண்ணன் இயக்கத்தில், சத்யராஜ் நடிப்பில், இளையராஜா இசையமைப்பில் 1994 ஆண்டு வெளியான திரைப்படம் 'அமைதிப்படை'.
மேலும்,இப்படத்தில் மணிவண்ணன், ரஞ்சிதா, சுஜாதா, கஸ்தூரி, மலேசியா வாசுதேவன் உள்ளிட்டோர் நடித்திருந்தனர்.
அண்மைக் காலமாக பழைய படங்கள் அடுத்தடுத்து ரீ ரிலீஸ் செய்யப்பட்டு வரவேற்பை பெற்று வரும் நிலையில் அமைதிப்படை திரைப்படம் 4K தரத்தில் மேபடுத்தப்பட்டு ரீரிலீஸ் செய்யப்பட உள்ளது.
ஸ்பேரோ சினிமாஸ் சார்பில் கார்த்திக் வெங்கடேசன், இந்த படத்தை 4K தொழில்நுட்பம் மற்றும் டால்பி ஒலியுடன் மிக விரைவில் ரீ-ரிலீஸ் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளார்.
(வீடியோ இங்கே )