திருகோணமலை புத்தர் சிலை விவகாரம் - தேரர்கள் தாக்கல் செய்த மனு தள்ளுபடி!
#SriLanka
#Trincomalee
#Court Order
Thamilini
3 months ago
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக திருகோணமலை நீதிவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்யக் கோரிய மனுக்களை மேல்முறையீட்டு நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி ரோஹந்த அபேசூரிய மற்றும் நீதிபதி பிரியந்த பெர்னாண்டோ ஆகியோர் அடங்கிய மேல்முறையீட்டு நீதிமன்ற அமர்வு இந்த உத்தரவை பிறப்பித்துள்ளது.
மேல்முறையீட்டு நீதிமன்றம் ஆரம்பத்தில் தனது தீர்ப்பை 2026 ஜனவரி 30 ஆம் திகதி வழங்க திட்டமிட்டிருந்தது.
ஆனால் மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் உத்தரவு வழங்கத் தயாராக இல்லை என்று தெரிவித்ததால் மனுக்கள் தொடர்பான விசாரணை இன்று (03) வரை ஒத்திவைக்கப்பட்டிருந்த நிலையில், மேற்படி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்