கொலை குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த கிளிநொச்சி நீதிமன்றம்!

#SriLanka #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
6 months ago
கொலை குற்றவாளி ஒருவருக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்த கிளிநொச்சி நீதிமன்றம்!

கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தினால் கொலை குற்றவாளி ஒருவருக்கு இன்றைய தினம் (02-02) மரண தண்டனை வழங்கப்பட்டுள்ளது.

 முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட குரவில் கிராமத்தில் கடந்த 2014 ஆம் ஆண்டு இடம்பெற்ற கொலையின் பிரதான சந்தேகநபருக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றம் மேற்படி தீர்ப்பளித்துள்ளது. 

கடந்த 2014 ஆம் ஆண்டு மாசி மாதம் 11ஆம் திகதியன்று புதுக்குடியிருப்பு பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட உடையார் கட்டு குரவில் பகுதியில் பூப்புனித நீராட்டு விழா நிகழ்வில் கலந்து கொண்ட இருவருக்கிடையில்  வாய் தர்க்கம் ஏற்பட்டுள்ளது.

 அதன்போது அதே இடத்தை சேர்ந்த அர்ச்சுனன் ரஜீபன் என்ற 19 வயதுடைய நபர் கத்தியால் வயிற்றில் குத்தப்பட்ட நிலையில், புதுக்குடியிருப்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக முல்லைத்தீவு மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார். 

இது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த புதுக்குடியிருப்பு பொலிஸார் சம்பவத்துடன் தொடர்புபட்ட சந்தேக நபரை கைது செய்து இரத்த மாதிரிகள் சான்றுப் பொருட்கள் என்பவற்றையும் முல்லைத்தீவு மாவட்ட நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.

ஆரம்பத்தில் வவுனியா மேல் நீதிமன்றத்திலும் பின்னர் கிளிநொச்சி மேல் நீதிமன்றத்தில் வழக்கு நடவடிக்கைகள் நடைபெற்ற நிலையில் சட்டமா அதிபர் திணைக்களத்தினால் குறித்த வழக்கு கிளிநொச்சி மேல் நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டு அங்கு  மேற்படி தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4