வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு’!

#SriLanka #Foriegn #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
4 months ago
வெளிநாட்டு வேலை வாய்ப்பு மோசடி தொடர்பில் விழிப்புணர்வு நிகழ்வு’!

வெளிநாட்டு வேலை தேடுபவர்கள் சமூக ஊடகங்கள் மற்றும் பிற வழிகள் மூலம் மனித கடத்தல் மற்றும் பல்வேறு மோசடிகளுக்கு ஆளாகுவது அதிகரித்து வருவதாக இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் தெரிவித்துள்ளது. 

இதன் விளைவாக, மனித கடத்தல் தடுப்பு சட்டம், இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் சட்டம் மற்றும் விசாரணைகள் குறித்து காவல்துறை அதிகாரிகளுக்கு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த பணியகம் முடிவு செய்துள்ளது.

காவல்துறை அதிகாரிகளுக்கு இது தொடர்பில் கற்பிப்பதன் மூலம், மக்களுக்கு மிகவும் துல்லியமான மற்றும் திறமையான சேவைகளை வழங்க முடியும் என்று பணியகம் நம்புகிறது. 

 தற்போது, ​​அதிகமான இலங்கையர்கள்  வெளிநாட்டு வேலைகளில் ஆர்வமாக உள்ள நி்லையில், இலகுவாக ஏமாற்றப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4