யாழ். மயிலிட்டியில் இராணுவ வாகனம் மோதி முதியவர் பலி

#SriLanka #Jaffna #Accident #vehicle #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
6 months ago
யாழ். மயிலிட்டியில் இராணுவ வாகனம் மோதி முதியவர் பலி

யாழ்ப்பாணம் மயிலிட்டி பகுதியில் இராணுவ வாகனம் மோதி முதியவர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

இச் சம்பவம் இன்று மதியம் இடம்பெற்றுள்ளது. துவிச்சக்கர வண்டியில் பயணித்த குறித்த முதியவர் வீதியை கடக்க முயன்றபோது அவர்மீது இராணுவ வாகனம் மோதியதிலேயே இந்த விபத்து சம்பவித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

சம்பவத்தில் நவரட்ணம் என்பவரே உயிரிந்துள்ளார். வாகனத்தை செலுத்திய பெண் சிப்பாய் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

சடலம் உடற்கூற்று பரிசோதனைக்காக தெல்லிப்பழை வைத்தியசாலையில் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் இராணுவ பொலிஸார் மற்றும் பலாலி பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4