கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக குவியும் மக்கள்! நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம் ஆரம்பம்!

#SriLanka #people #Project #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
கிவுல் ஓயா திட்டத்திற்கு எதிராக குவியும் மக்கள்! நெடுங்கேணியில் மாபெரும் போராட்டம் ஆரம்பம்!

கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து இன்றைய தினம் மாபெரும் போராட்டம் ஒன்றினை முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டிருத்த நிலையில் நெடுங்கேணி பேருந்து நிலையத்திற்கு முன்பாக போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

வன்னி பிரதேசத்தில் கிவுல் ஓயா நீர்த்தேக்க திட்டமானது நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. குறிப்பாக வவுனியா மற்றும் முல்லைத்தீவில் வாழ்கின்ற மக்களின் இனப்பரம்பலை மாற்றுகின்ற செயற்பாட்டினை முன்னெடுக்கும் நோக்குடனும், மக்களின் பொருளாதாரத்தை அழிக்கின்ற செயற்பாடாக இத்திட்டம் அமையவுள்ளதாக தெரிவித்து இந்த எதிர்ப்பு போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் மூலம் தமிழ் மக்களின் பூர்வீக நிலப் பகுதிகள் பெருமளவில் பறிபோகும் என்பதுடன் குடியேற்றங்கள் மூலமாக குடிப்பரம்பலும் திட்டமிட்டமுறையில் மாற்றியமைக்கப்படும் என்று கூறப்படுகின்றது.

இதேவேளை, அரசியல் கட்சிகள், பொது அமைப்புகள், பொது மக்கள் அனைவரும் குறித்த எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில் பங்குகொள்வதற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

2011ஆம் ஆண்டு அன்றைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் அமைச்சரவையால் அறிமுகப்படுத்தப்பட்ட இந்தத் திட்டம் எதிர்ப்புகள் மற்றும் நிதிப் பிரச்சினையால் கிடப்பில் போடப்பட்டது.

இந்தநிலையில், இந்தத் திட்டத்தை 2350 கோடி ரூபாவில் செயற்படுத்தத் தற்போதைய அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்



உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!