பெப்ரவரி மாத ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Lanka4
Prasu
3 hours ago
பெப்ரவரி மாத ராசிபலன் - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

உங்கள் தனித்தன்மைமிக்க இயல்பான நடவடிக்கைகளால் குடும்பத்தின் பெருமையை கட்டிக் காத்துவர தயங்க மாட்டீர்கள். உத்யோகஸ்தர்களுக்கு தாங்கள் கேட்ட இடமாற்றம் கிடைக்கும். 

வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மேலதிகாரியிடம் கவனமாக நடந்து கொள்வது நல்லது. இளம் பெண்களுக்கு விரும்பியவாறு வரண் கிடைக்கும். 

சொந்த தொழில் செய்பவர்களுக்கு இருப்பதை வைத்து தொழிலை மேம்படுத்தவும். தன் கீழ் பணிபுரிபவரிடம் வாய் நிதானம் தேவை. குடும்பத் தலைவிகளுக்கு பண பற்றாக்குறை ஏற்படும். 

தங்கள் பிள்ளைகளின் உதவியால் பண பிரச்சினை நீங்கும். சகோதர சகோதரி உறவு மேம்படும். வெளியூரிலிருந்து நல்ல செய்தி வந்து சேரும். கலைஞர்களுக்கு சம்பள உயர்வுடன் தாங்கள் எதிர்பார்த்த கம்பெனியிலிருந்து அழைப்பு வரும். 

மாணவ மணிகளுக்கு தங்கள் கடின உழைப்பினால் நல்ல மதிப்பெண்களை பெறுவர். இரவில் அதிக நேரம் விழிக்காமல் பார்த்துக் கொள்வது நல்லது. 

பரிகாரம்: 

  • வியாழக்கிழமை அன்று அருகில் உள்ள முருகப் பகவான் கோவிலுக்கு சென்று சிவப்பு மலர் மாலையை சாத்துவது நல்லது. 

ரிஷபம்

மற்றவர்களிடம் அன்பு கிடைக்காவிட்டால் அப்படியே செல்பவர் அல்லர் நீங்கள். மாறாக மீண்டும் மீண்டும் அன்பைக் கொடுத்து கொடுத்து உணரவைப்பதுதான் தங்களின் தனிச் சிறப்பு. உத்யோகஸ்தர்களுக்கு மேலதிகாரிகளின் நன்மதிப்புக்கு ஆளாவீர்கள். 

வேலை பளு சற்று அதிகரிக்கும். தங்கள் சக ஊழியர்களின் உதவியால் பங்கிட்டு முடித்து விடுவீர்கள். வியாபாரிகள், சில்லரை மற்றும் நடைபாதை வியாபாரிகளுக்கும் எதிர்பார்ப்புக்கு மேல் வருவாய் அதிகரிக்கும். 

அதில் ஒரு பகுதியை எடுத்து வீடுகட்ட ஆரம்பிப்பீர்கள். குடும்பத் தலைவிகளுக்கு தங்களுடைய சேமிப்பு தொகை அதிகரிக்கும். பணம் தாராளமாக புழங்கும். வீட்டில் உறவினர்களின் வருகை உண்டு. 

அவர்களால் தங்களுக்கு நன்மையே விளையும். கலைஞர்களுக்கு தாங்கள் நடித்த படம் பல வருடங்களாகியும் வெளிவராமல் இருந்தது அல்லவா அந்த படம் இந்தமாதம் வெளிவரும். 

அதில் தங்களின் நடிப்புத் திறன் வெளிப்படும். மாணவ மாணவிகள் தங்களது மாணவர்களுக்கு படிப்பில் முழுக் கவனம் தேவை.

தேவையற்ற விசயத்தில் கவனம் செலுத்தாமல் தாங்கள் தங்களின் எதிர்காலத்தைப்பற்றி சிந்தித்து அதற்கேற்ப படிக்க துவங்குங்கள். 

பரிகாரம்: 

  • லட்சுமி நரசிம்மருக்கு சனி கிழமை தரிசிப்பது நல்லது. முடிந்தால் துளசி மாலையை கொடுப்பதும் நல்லது. 

மிதுனம் 

நீங்கள் இயற்கையாகவே கற்பூரம் போன்று சட்டென்று புரிந்து கொள்ளும் ஆற்றல் சிறு வயது முதலே பெற்றிருப்பீர்கள். பெரிய சிக்கலான விசயத்தினையும் சாதாரணமாக கையாள்வீர்கள். 

வேலைக்கு செல்பவர்களுக்கு சக ஊழியர் ஒருவரால் தங்களுக்கு நன்மை உண்டாகும். சொந்த தொழில் செய்பவர்களுக்கு இனி முன்னேற்றம்தான். 

சில்லரை வியாபாரிகள் அதிக முதலீடுகளை செய்வரை தவிர்க்கவும். தங்கள் கணவருக்கு தேவையானதை அவர்களுக்கு அறியாமல் கொடுத்து மகிழ்ச்சியில் ஆழ்த்துவீர்கள். 

பிரிந்திருந்த தம்பதியர்களிடையே காண வேண்டும் என்ற ஆவல் பெருகும். ஒரு சில ஜோடிகள் மீண்டும் இணைவர். கலைஞர்களுக்கு அழகுக்கு முக்கியத்துவம் தருவீர்கள். 

திறமையிலும் கொஞ்சம் அக்கறை செலுத்துங்கள். மாணவ, மாணவிகளுக்கு விளையாட்டுப் போக்கினை தவிர்த்து அரசுத் தேர்வில் கவனம் செலுத்தவும். நல்ல மதிப்பெண்களை பெற கூடா நட்புகளை தவிர்ப்பது நல்லது. உடல் நலத்தில் முதுகு வலி வந்து போகும். 

பரிகாரம்: 

  • திங்கட் கிழமை அன்று வழிபாடு வாரகி அம்மனுக்கு சர்க்கரை பொங்கல் வைத்து படைப்பது நல்லது.

கடகம் 

நீங்கள் நிதானத்தை எப்போதும் கைவிடமாட்டீர்கள். அவசரம் என்பது தங்களுக்கு பிடிக்காத ஒன்று. உத்யோகஸ்தர்களுக்கு தங்கள் பணிகளில் ஆர்வம் அதிகரிக்கும். 

மேலதிகாரிகளால் பாராட்டப்படுவர். வியாபாரிகளுக்கு தங்களின் சிறு தொழிலின் முன்னேற்றத்திற்காக அரசு கடன் கிடைக்கும். குடும்பத் தலைவிகளுக்கு பணவரவில் பிரச்சினை இல்லை. 

தம்பதிகளிடையே அன்யோன்யம் கூடும். இருவரும் தங்கள் பிள்ளைகளின் எதிர்காலத்திற்காக பாடுபடுவர். கலைஞர்களுக்கு தயாரிப்பாளரிடம் மற்றும் இயக்குனரிடமும் எடுத்தெரிந்து பேசாதீர்கள். 

திருமணம் போன்ற சுபகாரியத்திற்காக காத்திருப்பவர்களுக்கு வரண் தட்டி தட்டி வந்து போகும். மாணவர்களுக்கு தாங்கள் நினைத்த மதிப்பெண்களை வகுப்புத் தேர்வில் பெற்று விடுவர். உடல் நலத்தில் பல்வலி வந்து போகும். 

பரிகாரம்: 

  • திங்கள் கிழமை அன்று மகாலஷ்மிக்கு முல்லை மலர் மாலையை சாத்துவது நல்லது. 

சிம்மம் 

யாரிடமும் வீண் சண்டைக்கு செல்லமாட்டீர்கள். ஆனால், வந்த சண்டையை விடாதவர் நீங்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு புதிய வாகனம் வாங்கும் எண்ணம் தோன்றும். 

வங்கி கடன் மூலம் வாங்கி விடுவீர்கள். சொந்த தொழில் செய்பவர்களுக்கு தங்களுடைய கிளைகளை மேம்படுத்துவர். குடும்பத் தலைவிகளுக்கு பணப்புழக்கங்கள் அதிகரிக்கும். 

வங்கியில் ஒரு தொகையை டெபாசிட் செய்வர். மாமியார் மருமகள் உறவு சுமூகமாக செல்லும். கலைஞர்களுக்கு திரை உலகத்திற்கு தங்கள் பாதம் பதியும் படி சாதனைப் படைப்பர். 

மாணவ மணிகளுக்கு படிப்பில் ஆர்வம் கூடும். தனது அன்றைய பாடங்களை படித்து விடுவர். பாதத்தில் வலி வந்து போகும். 

பரிகாரம்: 

  • பிள்ளையாருக்கு அருகம்புல்லை ஞாயிறு அன்று சாற்றுவது நல்லது. 

கன்னி 

உடல் பலத்தினை காட்டிலும் மனப் பலம் மிக அவசியம் வேண்டும் என்று அறிவுரை கூறுபவர் நீங்கள். வேலைக்கு செல்லும் பெண்களுக்கு தங்கள் பிள்ளைகளை பாதுகாக்க பெற்றோரின் உதவி கிடைக்கும். 

வேலை சுமை குறையும். சொந்த தொழில் செய்யும் பெண்களுக்கு இணையதளம் வழியாக ஆர்டர்கள் வழியும். குடும்பத் தலைவிகளுக்கு வெளியே தேவையான பொருட்களை கணவர் வாங்கித் தந்து மகிழ்விப்பார். 

தங்கள் கணவர் தங்களை புரிந்து கொள்வார். கலைஞர்களுக்கு தாங்கள் நினைத்தவாரே குறித்த நேரத்தில் படபிடிப்பு ஆரம்பிக்கப்படும். மாணவ மாணவியருக்கு ஆசிரியரிடமிருந்து பாராட்டுகள் கிடைக்கும். தேக ஆரோக்கியம் பளிச்சிடும்.

பரிகாரம்: 

சனிபகவானுக்கு சனிக்கிழமை அன்று எள்தீபம் ஏற்றுவது மிக சிறந்தது. 

துலாம் 

நேர்மை, நியாயம் என்ற வேதவாக்கினைக் கொண்டவர் நீங்கள். பாரபட்சமின்றி தவறு செய்பவரை தட்டிக்கேட்பவர் நீங்கள். வேலைக்கு செல்லும் ஆண்களுக்கும் பெண்களுக்கும் சொல்வதென்னவென்றால் சக ஊழியர்களிடம் தங்கள் குடும்ப விஷயத்தை பகிர்ந்து கொள்ள வேண்டாம். 

சொந்த தொழில் செய்பவர்களுக்கு தங்கள் தொழிலில் தொழில்நுட்பத்தை புகுத்துவீர்கள். கடன் பிரச்சினை அகலும். குடும்பத் தலைவிகளுக்கு கணவர் வீட்டு உறவினர் வந்து போவர். 

கணவருடைய பேச்சு அர்த்தமுள்ளதாக உணர்வீர்கள். கலைஞர்களுக்கு புதிய நபர் உங்களுக்கு சிபாரிசு செய்வர். மாணவ மணிகளுக்கு படிப்பில் ஆர்வம் அதிகரித்து தானாகவே மற்றவரின் தூண்டுதல் இன்றி படிக்கத் துவங்குவர். உடல் நலத்தில் கவனம் தேவை. வெளியிடங்களில் உட்கொள்ள வேண்டாம். 

பரிகாரம்: 

  • லக்ஷ்மி நரசிம்மரை வெள்ளிக்கிழமை தோறும் சென்று வழிபடுவது நல்லது.

விருச்சிகம்

நீங்கள் மற்றவர்களுக்கு இரக்கத்துடன் உதவுபவர். உங்களை சீண்டினால்தான் நீங்கள் எரிமலையாக தோன்றுபவர். உத்யோகஸ்தர்களுக்கு அலுவகத்தில் தங்கள் பணிகளை விரைவாய முடித்து மேலதிகாரிகளிடம் நற்பெயர் வாங்குவீர்கள்.

வியாபாரிகளுக்கு வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை உயரும். லாபமும் உயரும். குடும்பத் தலைவிகளுக்கு குடும்பத்தில் சில முக்கிய முடிவுகளை எடுக்கும் உரிமைகள் உங்களுக்கு கிடைக்கும். 

தம்பதியர் இடையே அன்னியோன்யம் கூடும். கலைஞர்களுக்கு தங்கள் சக ஊழியர்களால் பண உதவி கிடைக்கும். மாணவ மாணவிகளுக்கு அரசு தேர்வு என்பதால் பய உணர்வு அதிகரிக்கும். நன்கு படித்திருப்பது நல்லது. உடல் நலம் சிறப்படையும். 

பரிகாரம்: 

  • சூரிய பகவானுக்கு ஞாயிற்றுக்கிழமை அன்று கோதுமையை நைவேத்தியமாக வைத்து படைப்பது நல்லது. 

தனுசு 

உங்கள் மனம் எதிலும் எங்கேயும் தனக்கு மட்டுமே முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று எண்ணுபவர் நீங்கள். வேலைக்கு செல்பவர்கள் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. 

ஒரு சேமிப்பு தொகையாவது போட்டு வைப்பது நல்லது. சொந்த தொழில் செய்பவர்களுக்கு புதியதொரு தொழிலை துவங்க அரசு கடன் கிடைக்கும். 

குடும்பத் தலைவிகளுக்கு கணவரது முழு சம்பளமும் தங்களுக்கு கைக்கு வரும். தங்களுடைய குடும்ப நிர்வாகம் மேம்படும். தங்கள் அறிவுரையை கணவர் கேட்டு நடப்பார். 

கலைஞர்களுக்கு எதிர்பாலினரிடத்தில் கவனம் தேவை. அதிக பேச்சைக் குறைப்பது நல்லது. இளம் பெண்களுக்கு கலைத்துறையிலேயே நல்ல துணை கிடைக்கும். 

மாணவர்களுக்கு தனக்கு புரிந்து கொள்ள முடியாத பாடத்தை ஆசிரியரிடம் சந்தேகத்தை தீர்த்துக் கொள்வது நல்லது. தேக ஆரோக்கியம் சிறப்படையும். 

பரிகாரம்: 

  • வியாழக்கிழமை அன்று மஞ்சள் வஸ்திரத்தை குருபகவானுக்கு சாத்தி வருவது தடைகளை உடைக்கச் செய்யும். 

மகரம்

நீங்கள் சுறுசுறுப்புடன் இயங்கிக் கொண்டு இருக்கும். கடிகாரத்தைப் போன்றவர். வேலைக்கு செல்லும் ஆண்களுக்கும் மற்றும் பெண்களுக்கும் வேலையில் சுமைகள் அதிகரிக்கும். 

அதனை திட்டமிட்டு முடித்து விடுவீர். சொந்த தொழில் செய்பவர்கள் கொடுக்கல் வாங்கலில் கவனமுடன் இருப்பது நல்லது. குடும்பத் தலைவிகளுக்கு புதியதொரு தொழில் வீட்டில் இருந்தபடியே கற்றுக் கொள்வர். 

பிள்ளைகள் உங்கள் சொல்படி கேட்பர். கலைஞர்களுக்கு தங்கள் படம் பல கோடியை தாண்டும் அளவிற்கு அதிக லாபத்தை பெறுவர்.

மாணவர்களுக்கு பகுதி நேர வேலையில் ஈடுபடுவர். பெற்றோர்களுக்கு உதவியும் புரிவர். இடுப்பு கை கால்களில் வலி வந்து நீங்கும். 

பரிகாரம்: 

  • ஐயப்பனை சனிக்கிழமை அன்று சென்று வழிபடுவது மிக நன்று. 

கும்பம் 

நீங்கள் குடும்பத்திற்காக பல தியாகங்களை செய்யத் தயங்காதவர். படிப்படியாக முன்னேறும் தன்மை கொண்டவர் நீங்கள். வேலைக்கு செல்பவர்களுக்கு வங்கியில் கடன் வசதி கிடைக்கும். 

வீடுகட்ட ஆரம்பிப்பர். சொந்த தொழில் செய்பவர்களுக்கு நினைத்த காரியம் வெற்றி பெறும். இரண்டு வகையான துறைகளில் இருந்து லாபம் கிடைக்கும். 

குடும்பத் தலைவிகளுக்கு பணவரவு தாராளமாக இருக்கும். தங்களுக்கு வேண்டிய பொருள்களை வாங்கி குவிப்பார். தம்பதிகளிடையே ஒற்றுமை நிலவும். 

கலைஞர்களுக்கு தங்கள் கதாபாத்திரம் பேசப்படும் வண்ணம் இருக்கும். மாணவ மணிகளுக்கு படிப்பில் ஆர்வம் கூடி தங்களுக்கு பிடித்த துறையைத் தேர்ந்தெடுப்பர். 

பரிகாரம்: 

  • செவ்வாய்க்கிழமை அன்று கால பைரவருக்கு சிவப்பு வஸ்திரம் சாத்துவது நல்லது. 

மீனம் 

நீங்கள் பாகுபாடின்றி அனைவருக்கும் உதவும் குணம் உங்களுக்கு உண்டு. உத்யோகஸ்தர்களுக்கு வேலையில் மனநிம்மதி கிடைக்கும். வேலைபளு குறையும். 

வியாபாரிகளுக்கு வெளியூருக்குச் சென்று கொள்முதல் போடுவீர்கள். தங்கள் பிள்ளைகளுக்கு நல்ல வேலை கிடைக்கும். குடும்ப தலைவிகளுக்கு தங்கள் வீட்டில் விருந்தினர்கள் வருகை உண்டாகும்.

அவர்களுடன் தங்கள் குடும்பத்துடன் வெளியிடங்களுக்குச் சென்று வருவீர்கள். பிரிந்திருந்த தம்பதிகளின் கணவர் வீட்டார் மீண்டும் சேருவதற்கு பெரியவர்களின் மூலமாக சமரசத்திற்கு வருவார்கள். 

கலைஞர்களுக்கு கதைக்கு முக்கியத்துவம் தாருங்கள்.ஒருமுறைக்கு இரு முறை யோசித்து ஒப்பந்தம் செய்து கொள்ளுங்கள். 

மாணவ, மாணவிகளுக்கு படிப்பில் அக்கறை செலுத்துவர். ஆசிரியர் சொல்லை மதிப்பர். உடல் நலத்தில் ரத்த அழுத்தம் அதிகரிக்கும். காலம் தாழ்த்தாமல் மருத்துவரை அணுகவும். 

பரிகாரம்: 

  • புதன் கிழமை அன்று பெருமாளுக்கு துளசி மாலையை அணிவிப்பது நல்லது.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!