இந்த வாரம் யாருக்கு என்ன நடக்கும்? 12 ராசிகளுக்கும் பலன்கள் உள்ளே (வீடியோ இணைப்பு)

#Astrology #Rasipalan #Weekly-Rasipalan #Lanka4
Prasu
2 hours ago
இந்த வாரம் யாருக்கு என்ன நடக்கும்? 12 ராசிகளுக்கும் பலன்கள் உள்ளே (வீடியோ இணைப்பு)

மேஷம்

இந்த வாரம் உங்களுக்கு காரிய சித்தியும், மனமகிழ்ச்சியும் தரும் வாரமிது. கிரகங்களின் சேர்க்கை ராஜ்ய ஸ்தானத்தை வலுப்படுத்துவதால், நீண்ட காலத் திட்டங்கள் இப்போது செயல் வடிவம் பெறும். 

புதிய முயற்சிகளில் வெற்றி கிட்டும். குடும்பத்தில் சுப நிகழ்ச்சிகளுக்கான பேச்சுகள் சுமுகமாக முடியும். பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்குத் திருப்தி அளிக்கும். 

அரசியலில் உள்ளவர்களுக்குப் புதிய பொறுப்புகளும் மேலிடத்தின் நன்மதிப்பும் தேடி வரும். தொழில் மற்றும் வியாபாரத்தில் எதிர்பார்த்த லாபம் இரட்டிப்பாகும்.

உத்தியோகத்தில் பதவி உயர்வு உண்டு. ரத்த அழுத்தம் உள்ளவர்கள் உணவில் கட்டுப்பாட்டுடன் இருப்பது அவசியம். முருகப் பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், ஏழைகளுக்குச் செந்நிற வஸ்திரம் தானம் செய்வதும் மேன்மைகளை வழங்கும். 

ரிஷபம்

நிதானத்துடனும் செயல்பட வேண்டிய வாரம் இது. அலைச்சல் இருந்தாலும், வார இறுதியில் நற்பலன்கள் கூடும். குடும்ப உறுப்பினர்களிடம் பேசும்போது கனிவு தேவை. 

தேவையற்ற விவாதங்கள் வேண்டாம். நண்பர்களின் உதவியால் முக்கிய காரியங்கள் கைகூடும். எடுத்தோம் கவிழ்த்தோம் என்று எதையும் செய்து விடக்கூடாது. 

பொதுவாழ்வில் இருப்பவர்கள் சமூகத் தொடர்புகளை விரிவுபடுத்துவார்கள். வியாபாரத்தில் புதிய முதலீடுகளை ஒருமுறைக்கு இருமுறை சிந்தித்துச் செய்வது உசிதம். 

உத்தியோகஸ்தர்களுக்கு பணிச்சுமை அதிகரித்தாலும், உழைப்பிற்கு உரிய அங்கீகாரம் மேலதிகாரிகளிடமிருந்து கிடைக்கும். கழுத்து, தோள்பட்டையில் வலி ஏற்படலாம். ஓய்வு தேவை. 

மகாலட்சுமிக்கு நெய் தீபம் ஏற்றுவது, பசுவிற்கு அகத்திக்கீரை, வெல்லம் கலந்த அரிசியை வழங்குவது வெள்ளை நிற ஆடை அணிவது ஆகியவை மன அமைதி தரும். 

மிதுனம் 

புதிய வாய்ப்புகள் கதவைத் தட்டும் வாரமாக இது திகழ்கிறது. அஷ்டம ஸ்தான கிரகங்களால் அதிர்ஷ்டக் காற்று உங்கள் பக்கம் வீசும். நீண்ட நாட்களாக எதிர்பார்த்து காத்திருந்த நல்ல செய்தி உங்களைத் தேடி வரும். 

குடும்பத்தில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்; உறவினர்களுடனான உறவு மேன்மையடையும். அரசியல் மற்றும் சமூகத் தொண்டில் இருப்பவர்களுக்குப் புகழும் கௌரவமும் உயரும்.

வெளிநாட்டுத் தொடர்புடைய வணிகங்களில் எதிர்பாராத லாபம் கிடைக்கும். உத்தியோகத்தில் சக ஊழியர்களின் ஒத்துழைப்பு முழுமையாகக் கிடைக்கும். 

நிதி நிலைமை திருப்திகரமாக இருக்கும்; சேமிப்புகள் உயரும். சுவாசக் கோளாறு ஏற்படாமல் இருக்க ஓய்வு, யோகாசனம் செய்வது சிறந்தது. பெருமாளுக்கு துளசி அர்ச்சனை, ஏழை மாணவர்களுக்கு நோட்டுப் புத்தகம் தானம், விஷ்ணு சகஸ்ரநாமம் கேட்பது காரியத் தடை அகற்றும். 

கடகம்

முயற்சிகளில் முன்னேற்றம் காணும் வாரமாக இது அமைகிறது. பாக்கியத்தில் சனியின் தாக்கம் இருந்தாலும், சப்தம ஸ்தான கிரகங்களின் கூட்டணி உங்களுக்குச் சமயோசித புத்தியை வழங்கும். 

குடும்பத்தில் மகிழ்ச்சியான சூழல் நிலவும். கணவன்-மனைவியிடையே ஒற்றுமை பலப்படும். அரசியலில் இருப்பவர்களுக்கு மக்கள் ஆதரவு பெருகும். புதிய திட்டங்களால் பொருளாதாரம் சீராகும். 

பழைய கடன்களை அடைப்பதற்கான வழி பிறக்கும். தொழிலில் புதிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும்; கூட்டுத் தொழில் செய்பவர்களுக்கு லாபம் கூடும்.

உத்தியோகத்தில் மேலதிகாரிகளின் பாராட்டுகளைப் பெறுவீர்கள். செரிமானம் தொடர்பான சிறு பிரச்சனைகள் வரக்கூடும். சிவபெருமானுக்குப் பால் அபிஷேகம் செய்வது, சந்திர தரிசனம் செய்வது, ஏழைகளுக்குத் தயிர் சாதம் தானம் செய்வது உடல் நலனைப் பாதுகாக்கும்.

சிம்மம் 

ஆளுமைத் திறனும் செயல்திறனும் அதிகரிக்கும் இனிய வாரமாக இது அமையும். உபஜெய ஸ்தானத்தில் கிரகங்கள் சஞ்சரிப்பதால் உங்கள் பேச்சிற்குச் சமூகத்தில் தனி மரியாதை கிடைக்கும். 

குடும்பத்தில் மங்கள காரியங்கள் கைகூடும்; வாழ்க்கைத்துணையின் முழு ஆதரவு உங்களுக்குப் பலம் சேர்க்கும். அரசியல் பிரமுகர்களுக்குப் புதிய பதவிகள் அல்லது அரசு வழி லாபங்கள் கிட்டும். 

நீண்ட நாள் நிலுவையில் இருந்த நிலுவைத் தொகைகள் வசூலாகும். வியாபாரத்தில் அரசு வழி லாபங்கள் கிட்டும். உத்தியோகத்தில் இடமாற்றம் அல்லது பதவி உயர்வுக்கான வாய்ப்புகள் உண்டு. 

முதுகு வலி தொடர்பான சிறு தொந்தரவுகள் நேரலாம். கோதுமை கலந்த உணவுகளை தானம் செய்வது, ஆதித்ய ஹிருதயம் வாசிப்பது, தந்தை, தந்தை வழிப் பெரியோர் ஆசி பெறுவது முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்.

கன்னி 

திட்டமிட்டுச் செயல்படுவதால் வெற்றி பெறும் வாரம். ஆறாம் வீட்டில் கிரகங்கள் வலுவாக இருப்பதால் எதிரிகளை முறியடித்து முன்னேறுவீர்கள். குடும்பத்தில் விட்டுக்கொடுத்துச் செல்வது அமைதியைத் தரும். 

நண்பர்களுடன் கருத்து வேறுபாடுகள் தோன்றலாம் என்பதால் விவாதங்களைத் தவிர்க்கவும். அரசியலில் இருப்பவர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டும். 

தொழிலில் மந்த நிலை மாறிக் சுறுசுறுப்பு உண்டாகும். வர்த்தக ரீதியான பயணங்கள் லாபம் தரும். புதிய முதலீடுகளை செய்வதில் நிதானம் தேவை. பணப்பரிமாற்றத்தில் கூடுதல் கவனம் தேவை. 

நரம்பு சம்பந்தமான சிறு பிரச்சனைகள் ஏற்படலாம். ஆஞ்சநேயருக்கு வெண்ணெய் காப்பு, மாற்றுத்திறனாளிகளுக்கு உதவி செய்வது, பச்சை பயறு தானம் செய்வது இறைவன் அருளைப் பெற்றுத் தரும். 

துலாம்

யோகமான பலன்கள் அதிகம் நடக்கும் வாரமாக இது அமையும். கேந்திரத்தில் கிரகங்கள் இணைவதால் புத்திசாலித்தனம், கலைத்திறன் மேலோங்கும். 

குடும்பத்தில் மகிழ்ச்சியான விஷயங்கள் நடைபெறும். புதிய சொத்துக்கள் வாங்கும் யோகம் உண்டு. அரசியல் மற்றும் கலைத்துறையினருக்குப் புகழும் கௌரவமும் தேடி வரும். 

நிதி நிலைமை மிகவும் திருப்திகரமாக இருக்கும். ஷேர் மார்க்கெட் மற்றும் முதலீடுகளில் நல்ல லாபம் கிடைக்கும். தொழிலில் கூட்டாளிகளுடன் இணக்கமான சூழல் நிலவும். உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு உரிய அங்கீகாரம் கிடைக்கும். 

ஆரோக்கியம் மேம்படும். அம்பிகையை வழிபட்டு லலிதா சகஸ்ரநாமம் பாராயணம், வசதியற்ற பெண்களுக்குத் திருமணச் சீராக வஸ்திர தானம் செய்வது குடும்பத்தில் வற்றாத செல்வத்தை அள்ளித் தரும். 

விருச்சிகம் 

சவால்களை முறியடித்து முன்னேறும் வாரமாக இது அமைகிறது. ராசிநாதன் செவ்வாய் உச்சம் பெற்று இருப்பதால் தைரியத்துடனும் தன்னம்பிக்கையுடனும் புதிய காரியங்களைத் தொடங்குவீர்கள். 

குடும்பத்தில் சுகபோகங்கள் கூடும். தாயின் உடல் நலத்தில் முன்னேற்றம் காணப்படும். அரசியல்வாதிகள் எதிரிகளின் சூழ்ச்சிகளை முறியடித்து வெற்றி பெறுவீர்கள். 

செல்வாக்கு உயரும். தொழில் ரீதியான பயணங்கள் வெற்றி தரும். ரியல் எஸ்டேட் துறையில் நல்ல லாபம் கிடைக்கும். வருமானம் சீராக இருந்தாலும், ஆடம்பரச் செலவுகளைக் குறைப்பது நல்லது. உத்தியோகத்தில் கூடுதல் பொறுப்புகள் தேடி வரும். 

உஷ்ணம் சம்பந்தமான உபாதைகள் ஏற்படலாம். முருகப் பெருமானுக்கு நெய் தீபம் ஏற்றி வழிபடுவதும், ரத்த தானம் செய்வதும், வீட்டில் வாசலில் நீர் தெளித்து பச்சரிசி கோலமிடுவதும் மங்களத்தை உண்டாக்கும்.

தனுசு

பக்தியும் நம்பிக்கையும் உங்களுக்குப் பலம் சேர்க்கும் வாரம் இது. தனஸ்தான கிரக கூட்டணியால் முயற்சிகள் அனைத்திலும் வெற்றி கிட்டும். பிதுர் வழிச் சொத்துக்களில் இருந்த சிக்கல்கள் தீரும். 

பிள்ளைகளின் முன்னேற்றம் மனதிற்கு மகிழ்ச்சி அளிக்கும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகளும் கௌரவமும் தேடி வரும். பொருளாதார நிலையில் முன்னேற்றம் காணப்படும். 

கொடுக்கல் வாங்கலில் இருந்த இழுபறி நிலை மாறும். வர்த்தகத் துறையில் உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த லாபம் கிட்டும். உத்தியோக மாற்றம் சிலருக்குச் சாதகமாக அமையும். 

ஆரோக்கியத்தில் எலும்பு தொடர்பான கவனம் தேவை. தட்சிணாமூர்த்திக்கு மஞ்சள் மலர்களால் அர்ச்சனை செய்வதும், முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்குவதும், ஆசிரியர்களை வணங்குவதும் நலம் தரும்.

மகரம் 

ராசியில் சூரியன் மற்றும் செவ்வாய் சஞ்சரிப்பதால் மிகுந்த நிதானத்துடனும் பொறுமையுடனும் செயல்பட வேண்டிய வாரம் இது. தேவையற்ற விவாதங்களைத் தவிர்ப்பது நல்லது. 

குடும்ப விவகாரங்களை வெளியில் பகிர வேண்டாம். அரசியல் களத்தில் இருப்பவர்கள் பேச்சில் நிதானத்தைக் கடைப்பிடிக்கவும். பொருளாதார நெருக்கடிகள் வந்தாலும் சமயோசித புத்தியால் சமாளிப்பீர்கள். 

வியாபாரத்தில் புதிய கிளைகள் தொடங்கும் எண்ணம் நிறைவேறும். பழைய பாக்கிகள் வசூலாகும். உத்தியோகத்தில் இடமாற்றம் ஏற்பட வாய்ப்புண்டு. 

கடன் கொடுப்பது, வாங்குவது ஆகியவற்றில் கவனம் தேவை. சோர்வு நீங்கி சுறுசுறுப்பு அடைய நடைப்பயிற்சி, தியானம் அவசியம். ஊனமுற்றோருக்கு உணவு வழங்குவது, சனி பகவானுக்கு தீபம் ஏற்றி வழிபடுவது, எறும்பிற்கு பச்சரிசி மாவு வைப்பதும் நன்மை தரும். 

கும்பம்

விரய ராசியில் கிரகங்கள் இணைவு காரணமாக காரியத்தடை இருந்தாலும் செல்வாக்கு உயரும். தடைப்பட்ட காரியங்கள் தானாக நிறைவேறும். 

வாழ்க்கைத்துணை ஆதரவு உண்டு. விழாக்களில் கௌரவிக்கப்படுவீர்கள். அரசியல் பிரமுகர்களுடன் நெருங்கிய நட்பு உண்டாகும். பண வரவு மகிழ்ச்சி தரும். 

ஒரு சிலருக்கு வீடு மனை யோகம் உண்டு. ஒரு சிலர் பழைய வீடுகளை மராமத்து பணிகளை செய்வார்கள். புதிய முதலீடுகளில் லாபம் பெருகும். தொழிலில் நவீன யுக்திகளைக் கையாண்டு முன்னேறுவீர்கள். 

உத்தியோகத்தில் உங்கள் திறமைக்கு மதிப்புக் கிடைக்கும். உங்கள் திட்டங்கள் வெற்றியடையும் காலம் இது. ஆரோக்கியம் சீராக இருக்கும். 

மன அழுத்தத்தைத் தவிர்க்க யோகாசனம் செய்யவும். ஆதரவற்றோருக்கு அன்னதானம், அனுமன் சாலிசா பாராயணம், நீல நிற ஆடை அணிவது மன உறுதியை, அமைதியைக் கொடுக்கும். 

மீனம் 

நிதானமான போக்கினால் நன்மைகள் விளையும் வாரம் இது. லாப ஸ்தானத்தில் கிரகங்கள் கூடுவதால் ஆன்மீகப் பயணம் மற்றும் சுபச் செலவுகள் அதிகரிக்கும். 

குடும்பப் பெரியவர்களின் ஆலோசனைகள் நற்பலனைத் தரும். உறவினர்களுடன் இருந்த கருத்து வேறுபாடுகள் மறையும். அரசியலில் உள்ளவர்கள் சக ஊழியர்களிடம் அனுசரித்துச் செல்வது நல்லது.

பொருளாதார இழுபறி நிலை மாறி எதிர்பார்த்த கடன் கிடைக்கும். வியாபாரத்தில் சிறு மாற்றங்கள் செய்து லாபத்தை அதிகரிக்கலாம். உத்தியோகத்தில் கடின உழைப்பிற்கு உரிய பலன் கிடைக்கும். 

கால் வலி, பாத வீக்கம் வரக்கூடும். சிவனுக்கு மஞ்சள் நிற வஸ்திரம், பழங்களைத் தானமாக வழங்குவது, நவகிரக வழிபாடு, ஏழைக் குழந்தைகளின் கல்விக்கு உதவுவது நல்ல மாற்றங்களை உண்டாக்கும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!