நுவரெலியாவில் தொப்புள் கொடியுடன் ஏரியில் மிதந்த குழந்தையின் சடலம்!
#SriLanka
#NuwaraEliya
#baby
Thamilini
3 months ago
நுவரெலியாவில் உள்ள கிரிகோரி ஏரியில் இருந்து புதிதாக பிறந்த குழந்தையின் சடலத்தை பொலிஸார் இன்று (01.02) மீட்டுள்ளனர்.
படகு நடத்துபவர்கள் மற்றும் ஏரியில் உள்ள உயிர்காப்பாளர்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலைத் தொடர்ந்து, சட்ட மருத்துவ அதிகாரியுடன் சேர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த பொலிஸார் சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பிவைத்துள்ளனர்.
நீர்த்தேக்கத்திலிருந்து உடல் மீட்கப்பட்ட நேரத்தில் தொப்புள் கொடியின் ஒரு பகுதி புதிதாகப் பிறந்த குழந்தையின் உடலில் இணைந்திருந்ததாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் இதுவரை எந்த சந்தேக நபர்களும் கைது செய்யப்படாத நிலையில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.