50 அடிப் பள்ளத்தில் விழ இருந்த பேருந்து - சாதூரியமாக செயற்பட்டு 40 பேரை காப்பாற்றிய சாரதி’!

#SriLanka #Accident #Driver
Thamilini
6 months ago
50 அடிப் பள்ளத்தில் விழ இருந்த பேருந்து - சாதூரியமாக செயற்பட்டு 40 பேரை காப்பாற்றிய சாரதி’!

50 அடி பள்ளத்தாக்கில் விழவிருந்த ஒரு பேருந்தொன்று பாதுகாப்பாக மீட்கப்பட்ட நிலையில் 40 பேரின் உயிர் காப்பாற்றப்பட்டுள்ளது. 

இலங்கை போக்குவரத்து சபைக்கு சொந்தமான பேருந்து ஒன்று தொழில்நுட்ப கோளாறு காரணமாக   தெரிபஹா செல்லும் பாதையில் விபத்துக்குள்ளாகியுள்ளது. 

குறித்த பகுதி ஏற்கனவே நிலச்சரிவு ஏற்பட்ட பகுதி எனவும் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் வீதியை விட்டு பேருந்து விலகியதை அவதானித்த சாரதி பேருந்தை பக்குவமாக நிறுத்தி விட்டு கீழே இறங்கியுள்ளார். 

இதனையடுத்து பேருந்தில் இருந்த பயணிகளும் கீழே இறங்கி டிப்போவிற்கு தகவல் அளித்துள்ளனர். பேருந்த நிறுத்தப்பட்டபோது அதன் இணைப்பு உடைந்ததாக கூறப்படுகிறது. இதனையடுத்து அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வருகை தந்து அதன சீரமைத்து கொடுத்துள்ளனர். 

இதனையடுத்து அனைவரும் பாதுகாப்பாக குறித்த பேருந்திலேயே பயணித்ததாக கூறப்படுகிறது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4