இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை: தூதரகம் விசேட அறிவிப்பு.

#SriLanka #Embassy #Alert #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
2 hours ago
இஸ்ரேல் வாழ் இலங்கையர்களுக்கு அவசர எச்சரிக்கை: தூதரகம் விசேட அறிவிப்பு.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ஏற்பட்டுள்ள அசாதாரண பாதுகாப்புச் சூழ்நிலைகளைக் கருத்திற்கொண்டு, இஸ்ரேலில் வசிக்கும் இலங்கையர்கள் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு இஸ்ரேலிலுள்ள இலங்கைத் தூதரகம் கோரிக்கை விடுத்துள்ளது.

எந்தவொரு ஆபத்தான நிலைமையையும் எதிர்கொள்வதற்கு இஸ்ரேலிய பாதுகாப்புப் படைகள் (IDF) தயாராக உள்ளன. இது தொடர்பான மேலதிக அறிவுறுத்தல்களையும் ஆலோசனைகளையும் இஸ்ரேலிய பாதுகாப்பு அமைச்சு அவ்வப்போது வெளியிட்டு வருவதாகவும் தெரிவிக்கப்படுகின்றது. 

ஏவுகணைத் தாக்குதல்கள் போன்ற அவசர நிலைகள் ஏற்பட்டால், அது குறித்த தகவல்கள் உடனுக்குடன் உங்களது கையடக்கத் தொலைபேசிக்கு அனுப்பி வைக்கப்படும். 

அபாய எச்சரிக்கை சத்தம் கேட்டால், உடனடியாக அருகிலுள்ள பாதுகாப்பு அறைகளுக்குச் சென்று தஞ்சம் அடையுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

தற்போதைய பாதுகாப்பற்ற சூழலைக் கருத்திற்கொண்டு, இன்று முற்பகல் 10:00 மணி முதல் பிற்பகல் 2:00 மணி வரை இலங்கைத் தூதரகம் திறந்திருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த காலப்பகுதியில் மக்கள் தங்களது தூதரக சேவைகளைப் பெற்றுக்கொள்ள முடியும். 

மேலதிக தகவல்களுக்குப் பொதுமக்கள் தொடர்ச்சியாகத் தூதரகத்தின் அறிவிப்புகளைப் பின்பற்றுமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!