தொலைபேசியால் ஏற்பட்ட விபரீதம் : மகளை தாக்கி கொலை செய்த தந்தை!
#SriLanka
#Arrest
#Crime
Thamilini
4 hours ago
கையடக்கத் தொலைபேசி தொடர்பாக ஏற்பட்ட தகராறில் 14 வயது சிறுமியை அவரது தந்தை கூரிய ஆயுதத்தால் கொலை செய்ததாக பொலிஸார் தெரிவித்தனர்.
உரகஸ்மன்ஹந்திய, தெல்கட பகுதியைச் சேர்ந்த பெண்ணே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தந்தைக்கும் மகளுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதத்தின் போது, சந்தேக நபர் அவரை கொக்கியால் தாக்கியதாக முதற்கட்ட விசாரணைகள் தெரிவிக்கின்றன.
பாதிக்கப்பட்ட பெண் பலத்த காயங்களுடன் எல்பிட்டிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்தார்.
மேலும் இறந்தவரின் உடல் எல்பிட்டிய மருத்துவமனையில் உள்ள பிணவறையில் வைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
உரகஸ்மன்ஹந்திய பொலிஸாரால் மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.