ரணில் விவகாரம் - சமன் ஏக்கநாயக்கவை விளக்கமறியலில் வைக்க உத்தரவு!
#SriLanka
#Court Order
#Ranil wickremesinghe
Thamilini
3 hours ago
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தொடர்பான வழக்கில் சந்தேக நபராக நீதிமன்றத்தில் ஆஜரான முன்னாள் ஜனாதிபதி செயலாளர் சமன் ஏக்கநாயக்கவை பிப்ரவரி 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் லண்டன் பயணம் தொடர்பாக விசாரிக்கப்படும் வழக்கு தொடர்பாக இன்று (28) பிற்பகல் நீதிமன்றத்தில் ஆஜரானதை அடுத்து இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
பொது சொத்துச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவும் இன்று கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்