பலாங்கொட கஸ்ஸப தேரர் உள்ளிட்ட 10 பேருக்கான விளக்கமறியல் நீட்டிப்பு!
#SriLanka
#Trincomalee
#Court Order
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 hours ago
திருகோணமலை புத்தர் சிலை சம்பவம் தொடர்பாக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள பலாங்கொட கஸ்ஸப தேரர் உட்பட பத்து சந்தேக நபர்களையும் பிப்ரவரி 2 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது.
குறித்த வழக்கு இன்று திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்ட நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
திருகோணமலை நகர கடலோர பாதுகாப்பு மண்டலத்தில் சட்டவிரோதமாக புத்தர் சிலை வைக்கப்பட்டதாக பலங்கொட கஸ்ஸப தேரர் மற்றும் நான்கு பிக்குகள் உட்பட 10 சந்தேகநபர்கள் மீது கடலோர பாதுகாப்பு மற்றும் கடலோர வள மேலாண்மைத் துறை வழக்கு தாக்கல் செய்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்