நிரந்தர வேலைவாய்ப்பு கோரி ஜனாதிபதி செயலத்திற்கு முன் உணவு தவிர்ப்பு போராட்டம் - ஒருவர் வைத்தியசாலையில்!
#SriLanka
#strike
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
3 hours ago
ஜனாதிபதி செயலகத்திற்கு முன்பாக அபிவிருத்தி அதிகாரிகள் குழுவினால் நிரந்தர வேலைவாய்ப்பு கோரி உண்ணாவிர போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இதில் சுகவீனமுற்ற நபர் ஒருவர் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டிருந்த பெண் ஒருவர் சுகவீனமடைந்ததையடுத்து 1990 ஆம்புலன்ஸ் சேவையின் மூலம் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
ஏழு ஆண்டுகளாக பாடசாலைகளில் பணியாற்றி வருவதால், தங்களை ஆசிரியர் சேவையில் சேர்க்குமாறு கோரி 04 பேர் இந்த உணவு தவிர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் https://www.lanka4.com/ ஊடகத்துடன் இணைந்திருங்கள்