அம்பலாங்கொடையில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது!

#SriLanka #Arrest #gun
Thamilini
1 hour ago
அம்பலாங்கொடையில் வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த துப்பாக்கியுடன் நபர் ஒருவர் கைது!

அம்பலாங்கொடை, வதுகெதர பகுதியில் உள்ள ஒரு வீட்டின் அறைக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த மைக்ரோ பிஸ்டல் மற்றும் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 

அக்மீமன சிறப்பு அதிரடிப்படை (STF) முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலைத் தொடர்ந்து நடத்தப்பட்ட சோதனை நடவடிக்கையில் குறித்த துப்பாக்கிகள் மீட்கப்பட்டுள்ளன. 

  கைது செய்யப்பட்ட சந்தேக நபர் வதுகெதரவைச் சேர்ந்த 33 வயதுடையவர் என அடையாளம் காணப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 

 முதற்கட்ட விசாரணையில், சந்தேக நபர் துப்பாக்கியை வேறொரு பிரிவினருக்கு விற்கத் தயாராக இருந்ததாகக் கூறப்படுகிறது. சம்பவம் குறித்து அம்பலாங்கொடை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!