பலங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

#SriLanka #Hospital #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
4 hours ago
பலங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதி!

விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த பலங்கொட கஸ்ஸப தேரர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். 

மருத்துவப் பரிசோதனைக்காக பலங்கொட கஸ்ஸப தேரர் திருகோணமலை மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் ஏ.சி.கஜநாயக்க தெரிவித்தார். 

அண்மையில் திருகோணமலை சம்புத்த ஜயந்தி விகாரையில் ஏற்பட்ட சர்ச்சை தொடர்பில், பலங்கொட கஸ்ஸப தேரர் உட்பட நான்கு பிக்குகள் மற்றும் மேலும் 06 சந்தேகநபர்கள் எதிர்வரும் 28ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டனர். 

அதற்கமைய, பலங்கொட கஸ்ஸப தேரருக்கு ஏற்பட்ட நோய் நிலைமை காரணமாக, இரத்தப் பரிசோதனை ஒன்றை மேற்கொள்வதற்காகவே அவர் இவ்வாறு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக சிறைச்சாலைகள் ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்தார்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும்  lanka4.com  ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!