எம்பிலிபிட்டியவில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு நபர் ஒருவர் படுகொலை!
#SriLanka
#Police
#Investigation
#Crime
Thamilini
3 hours ago
எம்பிலிபிட்டிய வீரசிங்கபுர பகுதியில் நேற்று (23) தனிப்பட்ட தகராறு காரணமாக 39 வயதுடைய நபர் ஒருவர் கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டு கொலை செய்யப்பட்டுள்ளார்.
எம்பிலிபிட்டிய வீரசிங்கபுர பகுதியைச் சேர்ந்த ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் அறிவித்துள்ளனர்.
நீண்டகாலமாக நிலவி வந்த தனிப்பட்ட தகராறு காரணமாக மூன்று நபர்களால் இந்தக் கொலை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக முதற்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
குற்றத்தில் ஈடுபட்ட சந்தேக நபர்களைக் கைது செய்ய எம்பிலிபிட்டிய காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.