யாழில் புனரமைக்காத வீதியால் பறிபோன நான்கு உயிர்கள்!

#SriLanka #Jaffna #Road #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
5 hours ago
யாழில் புனரமைக்காத வீதியால் பறிபோன நான்கு உயிர்கள்!

யாழ்ப்பாணம் - உயரப்புலம் வீதி புனரமைக்கப்படாத காரணத்தால் நான்கு உயிர்கள் பறிபோனதாக மானிப்பாய் பிரதேச சபையின் இன்றைய அமர்வில் சுட்டிக்காட்டப்பட்டது.

இது குறித்து உறுப்பினர்களான அச்சுதபாயன் மற்றும் எட்வெட் மரியவாசினி ஆகியோர் கருத்து தெரிவிக்கையில், உயரப்புலம் வீதியானது நீண்ட காலமாக புனரமைக்காத நிலையில் காணப்படுகிறது. 

அந்த வீதியால் நோயாளர் காவு வண்டிகள் கூட செல்ல முடியாத நிலை காணப்படுகிறது. குறித்த வீதியால் நோயாளர் காவு வண்டி வரமுடியாததால் இதுவரை நான்கு உயிர்கள் பலியாகி உள்ளன. 

இன்னமும் எத்தனை உயிர்கள் பறிபோன பின்னர் அந்த வீதியை புனரமைப்பீர்கள்? எனவே விரைவாக அந்த வீதியை புனரமையுங்கள் என்றார். இது குறித்து தவிசாளர் ஜெசீதன் கருத்து தெரிவிக்கையில், வீதிகள் புனரமைப்புக்கு வரையறுக்கப்பட்ட நிதி எமக்கு கிடைக்கிறது.

இயன்ற அளவு நாங்கள் வீதி அபிவிருத்திகளை செய்கின்றோம். பிரச்சினைகளுக்குரிய வீதிகள் தொடர்பான விபரங்களை வழங்குங்கள், விசேட நிதிகள் ஏதாவது கிடைக்கும் பட்சத்தில் அவற்றை நாங்கள் புனரமைப்போம் என்றார்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும்  lanka4.com  ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!