களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தைக்கு முன்னால் வடிகான் இடிந்து விழும் அபாயம் - மக்கள் கோரிக்கை!

#SriLanka #Public #Market #Danger #ADDA #ADDAADS #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
3 hours ago
களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தைக்கு முன்னால் வடிகான் இடிந்து விழும் அபாயம் -  மக்கள் கோரிக்கை!

மட்டக்களப்பு மாவட்டம் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச சபைக்குட்பட்ட களுவாஞ்சிக்குடி பொதுச்சந்தைக்கு முன் பகுதியில் உள்ள வடிகான் உடைந்து விழுந்துள்ள நிலையில் அவ் வீதியினூடாக போக்குவரத்து செய்வதில் பல அசௌகரியங்கள் ஏற்படுவதாக பொதுமக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

சுமார் 03 வருடங்களாக இந்த வடிகான் உடைந்த நிலையில் காணப்படுவதாகவும் , இதனை புனரமைக்க பல முறை கமநல அமைப்பிடம் கோரிக்கை விடுத்தும் இந்த முயற்சி பயனளிக்கவில்லை எனவும் பொது மக்கள் குற்றம் சுமத்துகின்றனர்.

இதனிடையில் நேற்றைய தினம் முச்சக்கர வண்டி விபத்துக்குள்ளானதாகவும், மயிரிழையில் உயிர் தப்பியதாகவும் பொது மக்கள் தெரிவிக்கின்றனர்.

எனவே இதனை பிரதேச சபையோ/ கமநல அமைப்போ சீர் செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும்  lanka4.com  ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!