ஓய்வூதிய சட்டமூலத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் மன்றில் அறிவிப்பு!

#SriLanka #Parliament #ADDA #ADDAADS #ADDAFLY #ADDAPOOJA
Thamilini
3 hours ago
ஓய்வூதிய சட்டமூலத்தை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் தொடர்பில் மன்றில் அறிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத் திட்டத்தை ஒழிக்கும் சட்டமூலத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் நான்கு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. 

குறித்த மனுவின் நகலை பெற்றுள்ளதாக  சபாநாயகர் டாக்டர் ஜகத் விக்ரமரத்ன இன்று (22) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். 

அரசியலமைப்பின் 121(1) வது பிரிவின்படி இந்த மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக சபாநாயகர் குறிப்பிட்டார். 

 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கான ஓய்வூதியத்தை ஒழிக்கும் சட்டமூலம் ஜனவரி 7 ஆம் திகதி நீதி மற்றும் தேசிய ஒருங்கிணைப்பு அமைச்சர் டாக்டர் ஹர்ஷன நாணயக்காரவால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது. 

சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் அடுத்த மாத இறுதியில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. மேற்படி சட்டமூலம் நிறைவேற்றப்படும் பட்சத்தில்  முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்கள் 512 பேரின் ஓய்வூதிய உரிமைகள் ரத்து செய்யப்படும் என்பதும் குறிப்பிடத்தக்கது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!