குளிரான காலநிலையினால் வைரஸ் தொற்றுகள் அதிகரிப்பு!

#SriLanka #weather #Cold #ADDA #shelvazug #SHELVA #SHELVAFLY #ADDAFLY #ADDAPOOJA
Abi
12 hours ago
குளிரான காலநிலையினால் வைரஸ் தொற்றுகள் அதிகரிப்பு!

உடனடியாக மருத்துவரை நாடுமாறு மக்களுக்கு அறிவுறுத்தல் இலங்கையில் நிலவும் குளிர் காலநிலையுடன் பல வைரஸ் நோய்கள் பரவுவதில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இந்த நோய்கள் குறிப்பாக இளம் சிறுவர்களிடையே பரவலாகக் காணப்படுவதாக கம்பஹா வைத்தியசாலையின் சிரேஷ்ட வைத்திய அதிகாரி வைத்தியர் ரவீந்திர உடகமகே குறிப்பிட்டார்.

குளிர் மற்றும் வறண்ட வானிலை பல்வேறு வைரஸ் தொற்றுகள் விரைவாகப் பரவுவதற்கு பங்களிக்கின்றன.இது பிரதானமாக மேல் சுவாசக் குழாயைப் பாதிக்கிறது.

எனவே, காய்ச்சல், இருமல், சளி, தொண்டை வலி, கடுமையான தலைவலி, தசை வலி, வாந்தி மற்றும் வயிற்றுப்போக்கு ஆகய அறிகுறிகள் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் அல்லது நோயாளிகள் சுவாசிப்பதில் சிரமத்தை அனுபவித்தால் உடனடியாக மருத்துவ உதவியை நாட வேண்டும் என்று அவர் மேலும் அறிவுறுத்தினார்.

இதற்கிடையில், நாடு முழுவதும் காற்றின் தர அளவு தற்போது குறைவாகவே இருப்பதாக மத்திய சுற்றுச்சூழல் ஆணையகம் (CEA) குறிப்பிட்டது.

அடுத்த இரண்டு நாட்களுக்குள் நிலைமை மேம்பட்டு குறையும் என்று எதிர்பார்க்கப்படுவதாக CEA செய்தித் தொடர்பாளர் அஜித் குணவர்தன குறிப்பிட்டார்.

 இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!