வங்கதேசத்தில் 55 வயது இந்து தொழிலதிபர் அடித்து கொலை
#Hindu
#Death
#Attack
#Bangladesh
Prasu
4 hours ago
வங்கதேசத்தில் லிட்டன் சந்திர கோஷ் என்ற 55 வயது இந்து தொழிலதிபர் அடித்துக் கொல்லப்பட்டுள்ளார். காஜிப்பூர் மாவட்டம் காளிகஞ்ச் பகுதியில் இந்தத் தாக்குதல் நடந்துள்ளது.
இந்த கொலை சம்பவம் தொடர்பாக ஒரேக் குடும்பத்தை சேர்ந்த மூன்றுபேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொலைக்குற்றம் சாட்டப்பட்டவர்கள் லிட்டனை அடித்தும், உதைத்தும் சராமாரியாக தாக்கியுள்ளனர். இதில் அவர் சம்பவ இடத்திலேயே சரிந்துவிழுந்து உயிரிழந்தார்.
மேலும் வங்கதேசத்தில் சமீபகாலமாக இந்துக்களுக்கு எதிராக நடந்து வரும் வன்முறைச் சம்பவங்களுக்கும், இந்தப் படுகொலைக்கும் தொடர்பு இருக்கிறதா என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.
(வீடியோ இங்கே )