இன்றைய ராசிபலன் (16.01.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

#Astrology #Rasipalan #Todayrasipalan #Dailyrasipalan
Prasu
3 hours ago
இன்றைய ராசிபலன் (16.01.2026) - 12 ராசிகளுக்கும் உள்ளே பலன்கள் உள்ளன

மேஷம்

அசுவினி: மகிழ்ச்சியான நாள். வேலைகளில் ஏற்பட்ட தடை விலகும். விருந்தினர் வருகையால் குடும்பத்தில் குதுகலம் அதிகரிக்கும். பரணி: பெரிய மனிதர்கள் ஆதரவு கிடைக்கும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். வேலைப்பார்க்கும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை விலகும். கார்த்திகை 1: சந்திராஷ்டமத்தால் அலைச்சல், நெருக்கடி ஏற்படும். மாலையில் நிலைமை சீராகும். குழப்பம் விலகும்.

ரிஷபம்

கார்த்திகை 2,3,4: கவனமாக செயல்பட வேண்டிய நாள். காலையில் சந்திராஷ்டமம் தொடங்குவதால் குழப்பம் ஏற்படும். ரோகிணி: திட்டமிட்டு செயல்படுவது அவசியம். கொடுக்கல் வாங்கலில் நெருக்கடி உண்டாகும். வியாபாரத்தில் தடைகளை சந்திப்பீர். மிருகசீரிடம் 1,2: குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்னை முடியும். பயணத்தில் நெருக்கடி தோன்றும். நீங்கள் நினைப்பது வேறாக இருக்கும்.

மிதுனம்

மிருகசீரிடம் 3,4: செலவு அதிகரிக்கும் நாள். குடும்பத்தினர் விருப்பங்களை நிறைவேற்றுவீர். கூடுதல் கவனம் தேவை. திருவாதிரை: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். இழுபறியாக இருந்த வேலைகள் முடியும். புனர்பூசம் 1,2,3: தொழிலில் ஏற்பட்ட தடை விலகும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சியில் லாபம் உண்டாகும்.

கடகம்

புனர்பூசம் 4: உழைப்பால் உயர்வு காணும் நாள். பண வரவில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் ஏற்படும். பூசம்: விவேகத்துடன் செயல்பட்டு வெற்றியடைவீர். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். தொழிலில் லாபம் காண்பீர். ஆயில்யம்: பொது சேவையில் ஈடுபடுவீர். உறவினர்கள் வீடுதேடி வருவர். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி லாபமாகும்.

சிம்மம்

மகம்: நன்மையான நாள். உடல்நிலை சீராகும். எதிர்பார்ப்பு பூர்த்தியாகும். தொழிலில் புதிய தொடர்பு கிடைக்கும். பூரம்: உழைப்பு அதிகரிக்கும். அலைச்சல் உண்டாகும். எடுத்த வேலை நடக்கும். வருமானம் திருப்தி தரும். உத்திரம் 1: நினைப்பதை நடத்தி முடிப்பீர். இழுபறியாக இருந்த வேலை முடியும். நீங்கள் மேற்கொள்ளும் முயற்சி வெற்றியாகும்.

கன்னி

உத்திரம் 2,3,4: உழைப்பால் உயர்வும் காண்பீர். உற்சாகத்துடன் செயல்படுவீர். தாய்வழி உறவினரால் அனுகூலம் உண்டாகும். அஸ்தம்: எதிர்ப்பு விலகும். வியாபாரத்தில் இருந்த தடை நீங்கும். தன்னம்பிக்கையுடன் செயல்படுவீர். சித்திரை 1,2: வெளியூர் பயணம் லாபம் தரும். குழப்பம் விலகும். வியாபாரத்தில் முன்னேற்றம் அடைவீர்.

துலாம்

சித்திரை 3,4: வருமானத்தால் வளம்காணும் நாள். நேற்று நிறைவேறாமல் இருந்த வேலை இன்று நிறைவேறும். நன்மை உண்டாகும். சுவாதி: முயற்சி வெற்றியாகும். பணிபுரியும் இடத்தில் செல்வாக்கு உயரும். குடும்பத்தினரை அனுசரித்துச் செல்வது நல்லது. விசாகம் 1,2,3: வருமானத்தில் ஏற்பட்ட தடை விலகும். வியாபாரத்தில் இருந்த போட்டியாளர் இடம் மாறுவர். எடுத்த வேலை நடக்கும்.

விருச்சிகம்

விசாகம் 4: உங்களைவிட்டு விலகிச் சென்ற வாடிக்கையாளர் மீண்டும் உங்களைத் தேடிவருவர். வருவாய் அதிகரிக்கும். அனுஷம்: வியாபாரத்தில் ஏற்பட்ட நெருக்கடி விலகும். எதிர்பார்த்த பணம் வரும். உறவினர்களை சந்தித்து மகிழ்வீர். கேட்டை: மனக்குழப்பம் தீரும். திட்டமிட்ட வேலைகளை நடத்தி முடிப்பீர். உடல் நிலையில் ஏற்பட்ட பாதிப்பு விலகும்.

தனுசு

மூலம்: குழப்பமின்றி செயல்பட வேண்டிய நாள். நேற்றுவரை இருந்த நெருக்கடி நீங்கும். பிரச்சனைகள் முடிவிற்கு வரும். பூராடம்: ஒரு சிலர் உங்களை சீண்டிப்பார்ப்பார். எந்த நிலையிலும் அமைதி தேவை. உங்கள் வேலைகளில் மட்டும் கவனம் செலுத்தவும். உத்திராடம் 1: நினைத்த வேலைகளை நினைத்தபடி நடத்தி முடிப்பீர். வரவேண்டிய பணம் வரும். குடும்ப நெருக்கடி குறையும்.

மகரம்

உத்திராடம் 2,3,4: அலைச்சலுக்கு ஆளாகும் நாள். உங்கள் வேலையில் எதிர்பாராத தடை உண்டாகும். திருவோணம்: அலைச்சலும் செலவும் அதிகரிக்கும். வரவு செலவிலும், வாகனப் பயணத்திலும் கவனமாக இருப்பது அவசியம். அவிட்டம் 1,2: உங்கள் வேலை நிலையை உணராமல் குடும்பத்தினர் சங்கடப் படுத்துவார்கள். மனம் குழப்பமடையும்.

கும்பம்

அவிட்டம் 3,4: நினைத்தது நிறைவேறும் நாள். வியாபாரத்தில் லாபம் அதிகரிக்கும். வெளி வட்டாரத்தில் செல்வாக்கு உயரும். சதயம்: பணிபுரியும் இடத்தில் ஏற்பட்ட பிரச்னை முடிவிற்கு வரும். வெளியூர் பயணத்தில் எதிர்பார்த்த லாபம் உண்டாகும். பூரட்டாதி 1,2,3: விருப்பம் பூர்த்தியாகும். நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும்.

மீனம்

பூரட்டாதி 1,2,3: விருப்பம் பூர்த்தியாகும். நேற்று வரை இருந்த நெருக்கடி விலகும். எடுக்கும் முயற்சி வெற்றியாகும். பூரட்டாதி 4: மகிழ்ச்சியான நாள். வியாபாரத்தில் ஏற்பட்ட தடை விலகும். வருமானம் அதிகரிக்கும். புதிய நம்பிக்கை உண்டாகும். உத்திரட்டாதி: நேற்று தள்ளிப்போன வேலை இன்று நிறைவேறும். பணிபுரியும் இடத்தில் தோன்றிய பிரச்னை முடிவிற்கு வரும். ரேவதி: வியாபாரத்தை விரிவு செய்வது குறித்து யோசிப்பீர். பெரியவர்கள் ஆதரவால் உங்கள் முயற்சி வெற்றியாகும்.

லங்கா4 (Lanka4)

(வீடியோ இங்கே )

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!