மரகத நாணயம் திரைப்பட ரசிகர்களுக்கான முக்கிய தகவல்
#TamilCinema
#Pongal
#Movie
Prasu
4 hours ago
நடிகர் ஆதி மற்றும் நிக்கி கல்ராணி நடிப்பில்தமிழ் திரையுலகில் கற்பனை மற்றும் நகைச்சுவை இணைந்து வெற்றிகரமாக உருவான திரைப்படம் மரகத நாணயம்.
2017ம்ஆண்டு வெளியான இந்த படம் நல்ல வரவேற்பை பெற்று வசூல் பெற்றது. இதனைத்தொடர்ந்து தற்போது இதன் இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது.
இரண்டாம் பாகத்தையும் ஏகேஆர் சரவணன்தான் இயக்குகிறார். இதில் ஆதி, நிக்கி கல்ராணி, பிரியா பவானி சங்கர், முனிஷ்காந்த், சத்யராஜ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு திபு நினன் தாமஸ் இசையமைத்துள்ளார். பேஷன் ஸ்டூடியோஸ், அக்செஸ் ஃபிலிம் ஃபேக்டரி இணைந்து படத்தை தயாரித்துள்ளது. இந்நிலையில் பொங்கலை முன்னிட்டு, படக்குழு சிறப்பு புரோமோ ஒன்றை வெளியிட்டுள்ளது.
(வீடியோ இங்கே )