உதவி பெறுவதில் சிக்கல் : டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீள கட்டியெழுப்ப முடியாத நிலை!

#SriLanka #UN #Disaster #Cyclone #ADDA #ADDAADS #ADDAPOOJA
Thamilini
1 hour ago
உதவி பெறுவதில் சிக்கல் : டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மீள கட்டியெழுப்ப முடியாத நிலை!

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட 95 சதவீதமான பகுதிகளில் புனர்நிர்மாணப் பணிகள் தாமதமடைந்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

ஐக்கிய நாடுகள் சபையின் மேம்பாட்டுத் திட்டம் (UNDP) வெளியிட்டுள்ள ஒரு கணக்கெடுப்பு அறிக்கையில் இந்த விடயம் தெரியவந்துள்ளது. 

சூறாவளியால் அதிகம் பாதிக்கப்பட்ட 22 மாவட்டங்களில் உள்ள 85 பிரதேச செயலகங்களில் இந்த ஆய்வு நடத்தப்பட்டது.

ஆய்வில் பதிலளித்த 95 சதவீதமானோர் தங்கள் பகுதிகளில் குடியிருப்பு, தொழில்துறை அல்லது சமூக உள்கட்டமைப்பு சேதமடைந்துள்ளதாகவும், இதில் ஏராளமான வீடுகள் மற்றும் சாலைகள் அடங்கும் என்றும் தெரிவித்துள்ளனர். 

கட்டுமானப் பணிகளில் பொருட்களுக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், சிலர் தேவையான நிதியை பெறுவதில் கட்டுப்பாடுகளை எதிர்கொள்வதாகவும் அந்த அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!