நாடாளுமன்றத்தின் அடுத்த கூட்டத்தொடர் தொடர்பில் வெளியான அறிவிப்பு!
#SriLanka
#Parliament
#ADDA
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
2 hours ago
நாடாளுமன்றம் 20 ஆம் திகதி முதல் 23 ஆம் திகதி வரை கூடும் என்று நாடாளுமன்றத்தின் பதில் பொதுச் செயலாளர் சமிந்த குலரத்ன தெரிவித்தார்.
அதன்படி 20 ஆம் திகதி நலன்புரி சலுகைகள் சட்டம் குறித்த விவாதங்கள் இடம்பெறும் என்றும், 21 ஆம் திகதி டிட்வா சூறாவளி தொடர்பில் விவாதிக்கப்படவுள்ளதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
அதேபோல் 22 ஆம் திகதி காலை 9.30 மணி முதல் 10.00 மணி வரையில்நிலையியற் கட்டளைகள் 22 (1) முதல் (6) வரை குறிப்பிடப்பட்டுள்ள நாடாளுமன்ற அலுவல்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ளது.
23 ஆம் திகதி பல்கலைக்கழகங்கள் (திருத்தம்) சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு விவாதம் இடம்பெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்