விமலின் சத்தியாக்கிரக போராட்டம் முடிவுக்கு வந்தது!
#SriLanka
#Wimal Weerawansa
#ADDA
#Harini Amarasooriya
#ADDAADS
#ADDAFLY
#ADDAPOOJA
Thamilini
4 hours ago
கல்வி அமைச்சின் முன் தொடர்ச்சியான 'சத்தியாக்கிரக' போராட்டத்தில் ஈடுபட்டு வந்த முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்ச, போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளார்.
தரம் 6 கல்வி சீர்திருத்தங்களை அடுத்த ஆண்டு வரை ஒத்திவைப்பதாக அரசாங்கம் அறிவித்ததைத் தொடர்ந்து அவர் இந்த முடிவை அவர் எடுத்துள்ளார்.
சிவில் சமூக பிரதிநிதிகள் மற்றும் பிறருடன் இணைந்து நடத்தப்பட்ட இந்த எதிர்ப்புப் பிரச்சாரம், புதிய கல்வி சீர்திருத்தங்களை திரும்பப் பெறக் கோரியும், பிரதமர் டாக்டர் ஹரிணி அமரசூரிய கல்வி அமைச்சர் பதவியில் இருந்து விலக வேண்டும் என்று வலியுறுத்தியும் முன்னெடுக்கப்பட்டிருந்தது.
இப்படியான செய்திகளை அறிய தொடர்ந்தும் LANKA4 ஊடகத்துடன் இணைந்திருங்கள்